“உழைக்கும் மக்கள் வாழும் வடசென்னைக்கு தடையற்ற பொதுப்போக்குவரத்து அவசியம்” பெரம்பூர் ஆர்ப்பாட்டத்தில் உ.வாசுகி வலியுறுத்தல்
28 Oct 2026, 12:40 am

“உழைக்கும் மக்கள் வாழும் வடசென்னைக்கு தடையற்ற பொதுப்போக்குவரத்து அவசியம்”

பெரம்பூர் ஆர்ப்பாட்டத்தில் உ.வாசுகி வலியுறுத்தல்

சென்னை, அக். 27-“உழைக்கும் மக்கள் வாழும் வடசென்னைக்கு தடையற்ற பொதுப்போக்குவரத்து அவசியம் எனசிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி வலியுறுத்தினார்.

வடசென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கபொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்த வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் சேவையை எண்ணூர், மணலி,மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் பெரம்பூர் வியாசர்பாடியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உ.வாசுகி பேசுகையில், பொதுப்போக்குவரத்தை நம்பி இருந்தாலும் சரி, அவரவர் வைத்திருக்கும் கார், இரண்டு சக்கர வாகனங்களைநம்பி இருந்தாலும் சரி. தனியார் போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து இரண்டையும் பயன்படுத்தும் யாராக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உரு

வெடுத்துள்ளது. நகரின் பல இடங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது.வடசென்னை என்பது சென்னை பெருநகர உற்பத்தியின் இதயமாக இருக்கிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள்,ஏழை மக்கள், நடுத்தர மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள். பள்ளி, கல்லூரிக்கு, தொழிற்சாலைகளுக்கு, மருத்துவமனைக்கு, வியாபாரத்திற்கு என பல்வேறு காரணங்களுக்காக செல்பவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் பொதுப்போக்குவரத்தைநம்பித்தான் இருக்கிறார்கள். ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி எத்தனை விண்ணை முட்டும் கட்டிடங்கள் இருக்கின்றன, எத்தனை ஹைப்பர் மார்க்கெட்டும், சூப்பர் மார்க்கெட்டும், மால்களும் இருக்கின்றன என்பதை பொறுத்து அல்ல. பொருட்களை உருவாக்க பங்களிப்பை, உழைப்பை செலுத்தும் உழைப்பாளி மக்களின் வளர்ச்சியை மையமாக வைத்து கணக்கிடுவதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். எனவேதான் ஏழை எளிய மக்கள் சார்ந்து இருக்கும் பொதுப்போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்,மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

பொதுப் போக்குவரத்து என்பது ஒரு வளர்ச்சிக்கு இதயம் போன்றது. போக்குவரத்து கட்டமைப்பு தனியார் கையில் இருந்தால், அதைஅவர்கள் விருப்பம் போல் பயன்படுத்துவார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் நிர்ணயிப்பார்கள். ஏற்கெனவே விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை, பள்ளி, கல்லூரி கட்டணங்கள்உயர்கின்றன. இன்றைக்கு வாழ்க்கை நடத்துவது என்பதே கடினமான விஷயமாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட சூழலில்போக்குவரத்தும் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் அவர்கள் சாதாரண மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அரசிடம் இருந்தால்தான், கோரிக்கை வைக்க முடியும், கேள்வி கேட்க முடியும்.மேலும் போக்குவரத்து கழகத்தில் உதிரி பாகங்கள் வாங்குவதில் ஏராளமான முறைகேடுகள், ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள்கூறப்படுகின்றன. போதுமான தரமான உதிரி பாகங்கள் இல்லை. இதனால் பேருந்துகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்து அதிகளவில் புகை வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

பொதுமக்களுக்கு ஸ்வாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிக்கு, மருத்துவமனைக்கு, தொழிற்சாலைக்கு என பல்வேறு இடங்களுக்கு செல்ல எத்தனை மணி நேரத்துக்கு முன்பு புறப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக வீட்டில் உள்ளபெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். தினசரி போக்குவரத்திற்காக மட்டும் ஏறக்குறைய 3 மணி நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. ஒரு மாதத்திற்கு 90 மணி நேரம். இதனால் எவ்வளவு உழைப்புசக்தி வீணாகிறது. இவற்றையெல்லாம் அறிவியல் பார்வையோடு, பொருளாதாரத்தோடு தொடர்புடையது என்ற அடிப்படையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என பொதுப்போக்குவரத்தை அரசு பலப்படுத்தவேண்டும்.

தற்போதைய அரசு குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என பலதுறைகளை மிக வேகமாக தனியார்கையில் வழங்குகிறது. தற்போது சேலத்தில் குடிநீர் விநியோகம் தனியாரிடம்வழங்கப்பட்டுள்ளது. இதை நகராட்சியால்,மாநகராட்சியால் செய்ய முடியாதா? அதிகாரிள், ஊழியர்கள் இதற்கு கூட தகுதி படைத்தவர்கள் இல்லையா? இத்தனை ஆண்டுகளாக யார் விநியோகம் செய்தார்கள். தனியார்மயம் என்பது மோடி அரசின் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகள். இவற்றை எல்லாம் துணிச்சலோடு தமிழக அரசு எதிர்த்து நிற்க முன்வரவேண்டும் என்று வாசுகி கேட்டுக் கொண்டார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், எஸ்.ராணி ஆகியோரும்கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.