தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களை மிரட்டும் தமிழக காவல்துறை உ.வாசுகி கண்டனம்

23 Jul 2026, 9:28 pm
மாணவர்களை மிரட்டும் தமிழக காவல்துறை உ.வாசுகி கண்டனம்

மாணவர்களை மிரட்டும் தமிழக காவல்துறை உ.வாசுகி கண்டனம்

தஞ்சாவூர், ஜூலை 23 : நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.

நீட் முறைகேடுகளும் மாணவர் போராட்டமும்

“நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தேசிய தேர்வு முகமையை கலைத்துவிட்டு, அத்தேர்வை மீண்டும் மாநிலங்களின் பொறுப்பில் ஒப்படை க்க வேண்டும்; தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்று கூறிய வாசுகி, தில்லியில் போராடும் மாண வர்கள் மற்றும் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்ப ட்டுள்ளதைக் கண்டிப்பதாகவும், போராடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதைக் கை விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம், வெள்ளிக்கிழமை அனைத்து கல்வி நிலையங்களில் வேலைநிறுத்தம் மற்றும் இரவு முழுவதும் விழித்திருந்து போராடும் போராட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தமிழக காவல்துறைக்குக் கண்டனம்

தில்லியில் போராடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது காவல்துறையினர் நடந்து கொண்ட முறையைக் கண்டித்து முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அதே வேளையில் சென்னையில் போராடும் மாண வர்களிடம் தமிழக காவல்துறை நடந்து கொள்வதும் மிரட்டுவதும் எந்த வகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்பினார். போராடுவதற்கான இடங்களைச் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசு உடனடியாக ஒதுக்கித் தர வேண்டும் என்றார். காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனைகள் காவிரி விவகாரத்தில் மேகதாது அணை

கட்டுவதைத் தடுத்து நிறுத்தத் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் அழைத்துப்பேசி தீவிர முயற்சி எடுக்க வேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 18 லட்சம் சாக்குகள் சேதமடைந்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி கவலை அளிப்பதாகவும் கூறி, இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

100 நாள் வேலைத் திட்டம் மற்றும் இட ஒதுக்கீடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நீக்கிவிட்டு நடைமுறைப்படு த்தப்பட்டுள்ள புதிய திட்டத்தின் நிதிச்சுமையை முழுமையாக மாநில அரசின் மீது சுமத்தி யுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வேலை வழங்காத நாட்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். மேலும், பெண்க ளுக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.பேட்டியின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.