தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தியாகி பி.ஜே.சந்துரு : போதையற்ற சமூகம் படைக்கப் போராடிய தீரன் - எம். ஜெயபாரத்

14 Jul 2026, 9:36 pm
தியாகி பி.ஜே.சந்துரு : போதையற்ற சமூகம் படைக்கப் போராடிய தீரன் - எம். ஜெயபாரத்

தியாகி பி.ஜே.சந்துரு : போதையற்ற சமூகம் படைக்கப் போராடிய தீரன் - எம். ஜெயபாரத்

தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வரும் போதை எதிர்ப்புப் போராட்டத்தில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த சந்துரு, கடலூர் குமார், ஆனந்தன் ஆகிய மூவரில், விருதுநகர் மண்ணில் உதித்த தியாகி பி.ஜே.சந்துருவின் நினைவு தினம் ஜூலை 15 ஆகும்.

மக்கள் சேவகனாக உருவெடுத்த சந்துரு

விருதுநகர் மண்ணில், தனது 13-ஆவது வயதில் குடியேறியவர் சந்துரு. 18 வயதில் சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகக் கல்லூரி மாண வர் பேரவைத் தேர்தலில் களம் கண்டதால் இவ ரது படிப்பு பாதியில் நின்றது. பின்னர், பாண்டியன் நகரில் நண்பர்களுடன் இணைந்து விவாதங்களைத் தொடங்கி, வாலிபர் சங்கக் கிளையை உருவாக்கினார். 1983-இல் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்த மறி யலில், முதுமையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீராங்க னை கே.பி. ஜானகியம்மாளின் வீரம் சந்துருவுக்குள் பெரும் தாக்கத்தைஏற்படுத்தியது.

1987-இல் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடந்த பந்த்தின்போது, கடையடைப்பை எதிர்த்த ஆளுங்கட்சியினரோடு ஏற்பட்ட மோதலில் சந்துரு சிறை சென்றார். 1989-இல் பாண்டியன் நகர் புறக்காவல் நிலையத்தை ஐந்து கிலோமீட்டர் தள்ளி மாற்ற முயற்சித்தபோது, மக்களைத் திரட்டிப் போராடி வென்றார். ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ் போன்ற அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பெற்றுத் தந்ததன் மூலம் அப்பகுதி குழந்தைகளின் அன்பிற்குரிய “சந்துரு மாமாவாக” மாறினார். இளைஞர்களை நல்வழிப்படுத்த விளையாட்டு மன்றங்களை உருவாக்கினார். குடல்வால் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 நாட்களிலும், அங்குள்ள சீர்கேடுகளை எதிர்த்து மனு அளித்து மின்விசிறிகளைச் சுழலச் செய்த சமரசமற்ற போராளி அவர்.

கள்ளச்சாராய எதிர்ப்பும் கயவர்களின் தாக்குதலும்

விருதுநகரில் ரவுடித்தனமும், கள்ளச்சாராய வியாபாரமும் செய்துவந்த கும்பலுக்கு எதிராக வாலிபர் சங்கம் களமிறங்கியது. குடிநீர் விநியோக முறைகேடு மற்றும் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்துச் சந்துரு நடத்திய தொடர் போராட்டங்களால் கள்ளச்சாராய கும்பல் முடக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் சந்துருவைக் குறிவைத்தது.

1990 ஜூலை 15 அன்று விருதுநகரில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மறுநாள் நடைபெறவிருந்த வாலிபர் சங்க மாநாட்டுப் பணிகளில் சந்துரு ஈடுபட்டிருந்தார். அப்போது, சாராயப் போதையில் வந்த கயவர்கள் சந்துருவையும் அவரது தோழர்களையும் வெட்டரிவாளால் தாக்கினர். தப்பியோட முயன்ற சந்துருவின் குதிகாலில் முதல் வெட்டு விழுந்தது. அடுத்தடுத்து விழுந்த எட்டு கொடூர வெட்டுகளால் சந்துருவின் உடல் மண்ணில் சரிந்து, ரத்த வெள்ளத்தில் அவரது உயிர் பிரிந்தது.

தொடரும் மக்கள் பணி

சந்துருவின் மரணம் வாலிபர் சங்கத் தோழர்களை முடக்கவில்லை. அவரது தியாகத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவருக்காகச் சந்துரு அன்று தொடங்கிய போராட்டம், 2010-இல் வாலிபர் சங்கம் நடத்திய 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டமாகப் பரிணமித்தது. தொடர் போராட்டங்களின் விளைவாக, விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, 2022-இல் பயன்பாட்டுக்கு வந்தது. தியாகிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள். அந்த விதையின் வழியில் போதையற்ற சமூகத்தைப் படைக்க லட்சக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டி மக்கள் பணியைத் தொடர்வோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.