தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராட்டப் பாசறையில் களம் கண்ட இளம் தியாகி பழனிசாமி

8 Jun 2026, 11:07 pm
போராட்டப் பாசறையில் களம் கண்ட இளம் தியாகி பழனிசாமி

போராட்டப் பாசறையில் களம் கண்ட இளம் தியாகி பழனிசாமி

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே ஊராட்சியில் செங்கொடி இயக் கம் 2 தியாகிகளை பெற்றுள்ளது. அந்த ஊராட்சி தான் இடுவாய். ஒருவர் சீராணம்பாளையம் பழனிசாமி. இன் னொருவர் இடுவாய் ரத்தினசாமி. பழனிசாமி 1979ஆம் ஆண்டு ஜூன் 9 நாள் படுகொலை செய்யப்பட்டார். அவரது 47ஆம் ஆண்டு தியாக தினம் இன்று. 17 வயதே ஆன பழனிசாமி படுகொலை சம்பவம், அவரோடு பயணித்து வந்த தோழர்களுக்கு, இன்றும் மாறாத ரணத்தோடு நெஞ் சில் கோபக்கனலாக கனன்று கொண்டுள்ளது.

போராட்டக் காலம்

1970 – 80 காலகட்டத்தில் திருப்பூர் வட்டாரத்தில் பல்வேறு தொழில்க ளில் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு கே.எஸ்.கருப்ப சாமி, கே.தங்கவேல், அ.பழனிச்சாமி போன்ற தலைவர்கள் தலைமை ஏற்று வழிநடத்தி கொண்டிருந்தனர். அப்போது, 1978 – 79 ஆம் ஆண்டுக ளில் திருப்பூர் மேற்கு ஏரியா எனப் படும் ஆண்டிபாளையம், மங்கலம், இடுவாய், 63 வேலம்பாளையம் உள் ளிட்ட பகுதியில் விசைத்தறி தொழிலா ளர் சம்பள உயர்வுக்கான போராட்டங் கள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த போராட்டத் துக்கும் சிஐடியு தலைவர்கள் வழி காட்டினர். விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டங்கள் சிஐடியு தலைமையில், மற்ற சங்கங்களோடு இணைந்து கூட்டு போராட்டமாக மிக உக்கிரமாக நடைபெற்றது. தொழிலா ளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை முறியடிக்க முடியாமல் விசைத்தறி முதலாளிகள் திணறிக் கொண்டிருந் தனர்.

துரோக ஒப்பந்தம்

இப்போராட்டத்தை பலவீனப்ப டுத்த முடியாத முதலாளிகள், அப் போதைய ஆளும் கட்சியான அதிமுக சார்பு தொழிற்சங்க தலைவர்களை விலைக்கு வாங்கி, போராடிக் கொண் டிருந்த தொழிலாளர்களின் உணர்வு களுக்கு எதிரான, ஒரு துரோக ஒப் பந்தத்தை ஏற்படுத்தினர். மற்ற சங்கங் கள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுக தொழிற் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர் கள்கூட அவர்களின் ஒப்பந்தத்தை ஏற் றுக் கொள்ளாமல் வேலை நிறுத்தத் தில் தொடர்ந்து பங்கேற்றனர். அதிமுக தொழிற்சங்கத்தினர், கைக்கூலிகள் ஆதரவுடன் விசைத் தறி கூடங்களை இயக்க முதலாளிகள் முயற்சித்தனர். சில இடங்களில் இயக் கவும் செய்தனர். சில இடங்களில் விசைத்தறிகளை இயக்கிய கருங்காலிகளுக்கும், போராடிக் கொண்டிருந்த தொழிலா ளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகர்க்கப்பட்ட வீடுகள்

இந்த சூழ் நிலையில், சுல் தான்பேட்டை, செட்டிபாளை யம், மங்கலம் பகுதியை சேர்ந்த சிஐடியு முன் னணித் தலைவர் களின் வீடுகள் குறிவைத்து தாக்கி இடித்து சிதைக் கப்பட்டன. அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் எல்லாம் சூறையாடப்பட் டன. இத்தகைய பிற்போக்குத்தன மான தாக்குதலை எதிர்கொண்டு தோழர்கள் உறுதியோடு நின்றனர். சிஐடியு தலைமை தலையிட்டு நிற் கதியாய் நின்ற தோழர்களுக்கு உத வக்கூடிய வகையில் நிதி வசூல் செய்து, இடித்து சிதைக்கப்பட்ட 16க்கும் மேற்பட்ட வீடுகளையும் சரி செய்து கொடுத்தது. மேற்கு ஏரியா தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கை போராட்டத்தில் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என திருப்பூரின் பல் வேறு தொழிற்சங்கங்களும் அரசை வலியுறுத்தினர்.

போராட்டப் பாசறை

சீராணம்பாளை யம் கிராமம் பனியன், சலவை பட்டறை, பவர்லூம் தொழில் களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதி கமாக வசிக்கும் பகுதியாக இருந்தது. தொழிலாளர்கள் அனைவரும் சிஐடியு வில் முன்னணியில் இருந்து செயல்பட்ட னர். விசைத்தறி தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்கங்கள் நடத்துவதிலும் முன் னணியில் இருந்தனர். மேற்கு ஏரியா போராட்டத்தில் சீராணம்பாளையம் ஒரு பாசறையாக செயல்பட்டது. எனவே சீராணம்பாளையம் தொழிலாளர் மீது தாக்குதல் நடத்தி னால் போராடும் தொழிலாளர்க ளுக்கு ஆதரவு தருவதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள், சிஐடியு சங் கத்தை பலவீனப்படுத்தி போராட் டத்தை முடிவுக்கு கொண்டுவர முடி யும் என நினைத்து முதலாளிகள், அதி முக தொழிற்சங்கத்தினர் தாக்குத லுக்கு திட்டமிட்டனர்.

படுகொலை தாக்குதல்

1979 ஆம் ஆண்டு ஜூன் 8 அன்று இரவு மங்களம் கிராமத்தில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்து விட்டு திரும்பிய சீராணம்பாளையம் பகுதி தோழர்களை வேவு பார்த்து அறிந்து கொண்டனர். கணபதிபாளை யம் நீலி பிரிவு அருகில் அதிமுக ரவுடி களும், குண்டர்களும் நள்ளிரவு ஒன் றரை மணி அளவில் மறைந்திருந்து கத்தி, கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயு தங்களுடன் திடீரென பின்பக்கம் இருந்து தாக்குதல் நடத்தினர். போராட்டக் களத்தில் முன்னணியில் செயல்பட்ட 17 வயதே ஆன இளம் பனியன் தொழிலாளி, தோழர் பழனி சாமியை வெறிகொண்டு வெட்டிச் சாய்த்தனர். எதிர்பாராத அந்த தாக்குதலில் இருந்து தப்பி வந்த கே.ஈஸ்வரன், ஏ. கதிர்வேல், தங்கவேல், ராமச்சந்திரன், எம்.நடராஜன் உள்ளிட்ட மற்றவர்கள் ஊர் வந்து மற்றவர்களிடம் சொல்லி தாக்குதல் நடந்த இடத்திற்கு திரும்பச் சென்றனர். அங்கு சென்று பார்த்த போது பழனிச்சாமி கொடூரமாக வெட் டப்பட்டு குற்றுயிரும், குறையுயிரு மாக கிடந்தார். உடனடியாக கோவை யில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த மருத்துவர் அவர் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாகத் தெரி வித்தார். திருப்பூரே மிகவும் பதட்டத்திற்கு உள்ளானது. தியாகி பழனிச்சாமி உடல் திருப்பூர் கட்சி அலுவலகத் திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கி ருந்து கட்சியின் மூத்த தலைவர் கே. ரமணி மற்றும் ஆர்.வெங்கிடு, கே.எஸ். கருப்பசாமி, கே.தங்கவேல் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர், பழனிச்சாமியின் உடலை 12 கிலோமீட்டர் தூரம் நடந்தே ஊர்வல மாக சீராணம்பாளையம் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். தன்னலமற்ற தியாகியின் நினைவு களை நெஞ்சில் ஏந்தி இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கை களை மற்ற பகுதிகளிலும் விரிவாக்க வேகமுடன் செயல்பட்டனர். இடுவாய் ஊராட்சி இன்றும் செங்கொடி இயக்கத்தின் வலிமை யான கோட்டையாக திகழ்கிறது. இங்கு தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை, வாழையடி வாழை யாக செங்கொடி இயக்கம் வளர்ந்து வருகிறது. இன்றைய கால மாற்றத்தில் இளம் தலைமுறை பாட்டாளி வர்க்கம் புதிய சூழலில், புதுப்புது வகையில் சுரண் டப்பட்டு வருகிறது. அவர்களை வென் றெடுக்கவும் தியாகிகளின் வழி வந்த செங்கொடி இயக்க புதல்வர்கள் போராட்ட களம் கண்டு வருகின்ற னர். இளம் சமுதாயத்தை ஈர்த்து வரு கின்றனர். வெற்றிகரமாக முன்னேறி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.