செங்கொடி இயக்கத்தின் காவல் அரண்: இன்று தியாகி கே.பூசாரியின் வீரவணக்க நாள்!
19 Jul 2026, 10:39 pm

செங்கொடி இயக்கத்தின் காவல் அரண்: இன்று தியாகி கே.பூசாரியின் வீரவணக்க நாள்!

வரலாறு என்பது வெறும் ஏடுகளில் எழுதப்படும் வார்த்தைகள் அல்ல; அது உழைக்கும் வர்க்கத்திற்காக தங் களை அர்ப்பணித்து கொண்ட தியாகிகளின் குருதியால் எழுதப் படும் காவியம். அந்த வரிசை யில், கோவை மண்ணில் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் விழுதுகளை யும், அதன் தலைவர்களையும் தன் உயிரை கவசமாக வைத்துப் பாதுகாத்த ஒரு உன்னதப் போராளி தான் தோழர் கே.பூசாரி.

தலைவர்களின் பாதுகாப்பு கவசம்

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும், கம்யூனிஸ்ட் இயக் கமும் செங்கொடி தொழிற்சங்க மும் கடும் அடக்குமுறைகளை சந்தித்த காலம் அது. மில் முத லாளிகளின் ஆதிக்கமும், அவர் களின் ஆதரவு பெற்ற ரவுடி கும் பல்களின் அட்டூழியமும் தொழி லாளர் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. தலைவர்கள் மக்கள் மத்தியில் சென்று வர வும், மறைமுகமாக இயங்கவும் ஒரு பாதுகாப்பு அரண் தேவை யாய் இருந்தது. அந்த பெருஞ் சுவராக தலை நிமிர்ந்து நின்ற வர்தான் குனியமுத்தூர் விஜய லட்சுமி மில் தொழிலாளியான தோழர் பூசாரி. இரும்பையொத்த உடல்வாகு, எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம், எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்கப் பாசம், இவை தான் பூசாரியின் அடையாளம். தோழர்கள் கே.டி.கே.தங்கமணி, பி.ராமமூர்த்தி, கே.ரமணி, என். கே.கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், பி.கே.ராமசாமி, எம். பூபதி போன்ற மாபெரும் தலை வர்களின் நிழலாக, அவர்களின் பாதுகாப்பு கவசமாக நின்று எதிரி களை திணறடித்தவர் பூசாரி.

கோழைகளின் சதி

அவரது வீரத்திற்கும், வியூகத் திற்கும் முன்னால் நேருக்கு நேர் மோத முடியாத வர்க்க எதிரிகள், குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த னர். செல்வபுரம் பகுதியில் செங் கொடி இயக்கத் தோழர்கள் பட்டாளமாக வாழ்ந்ததால், பக லில் பூசாரியை நெருங்க எதிரி களுக்கு துணிச்சல் வரவில்லை. 1955 ஜூலை 20, இரவு 9 மணி. செல்வபுரத்தின் ஒரு எளிய குடிலுக்கு அருகே, இருளின் மறையில் காத்திருந்த துரோகக் கும்பல், தியாகி பூசாரியை நய வஞ்சகமாக அழைத்து ‘வல்லை யம்’ என்ற கொடூர ஆயுதத்தால் தாக்கியது. வயிற்றுப் பகுதியில் பாய்ந்த அந்த ஆயுதம், ஒரு மக்கள் தலைவனின் மூச்சை அந்த இடத்திலேயே பறித்தது. உடன் இருந்த ஊழியர் சதாசிவம் காயங்களுடன் உயிர் தப்பினார். தலைவர்களுக்கெல்லாம் அர ணாக இருந்த அந்தப் பெரு வீரனின் உதிரம், செல்வபுரத்து மண்ணில் சரிந்தது.

கண்ணீர் கடலில் கோவை:

பூசாரியின் மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த கோவையும் திரண்டது. காளீஸ்வரா மில் உள் ளிட்ட பல ஆலைகளில் தொழிலா ளர்கள் 10 நிமிட வேலைநிறுத்தம் செய்து தங்களின் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர். சுமார் 7,000 தொழிலாளர்கள் பங் கேற்ற நெஞ்சை உலுக்கும் மௌன ஊர்வலம் தோழர்கள் கே. டி.கே.தங்கமணி, என்.கே. கிருஷ்ணன், பி.கே.ராமசாமி, எம். பூபதி தலைமையில் நடைபெற் றது. அன்று இரங்கல் கூட்டத் தில் பேசிய தலைவர்கள், “முதலா ளிகள் தங்களின் லாப வேட்டைக் காக தொழிலாளர்களை பிரித்து வைத்துள்ளனர். தொழிலாளர் கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதில் பயனேதுமில்லை. உழைப்பவர்களின் ஒற்றுமையே இன்றைய தேவை!” என தியாகி பூசாரியின் உடல் சாட்சியாகச் சபதமேற்றனர்.

தோழர் பூசாரி மறைந்து 70 ஆண்டுகள் உருண்டோடிவிட் டன. ஆனால், அவர் ஏற்றிய செங்கொடி இன்றும் உழைப்ப வர்களின் கைகளில் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. அதிகார வர்க்கமும், முதலா ளித்துவமும் இன்றும் தொழிலா ளர்களை சாதி, மத, அரசியல் ரீதி யாக பிரிக்க துடிக்கிறது. உழைப்பவனை உழைப்பவனே எதிரியாகப் பார்க்கும் சூழ்ச்சியை உடைப்பதே நாம் தியாகி பூசாரிக்குச் செலுத்தும் உண்மை யான வீரவணக்கம் ஆகும். அவர் சிந்திய குருதி நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்: “உழைப்ப வர்களே, ஒன்றுபடுங்கள்! செங் கொடியின் கீழ் ஓரணியில் திரளுங்கள்!” வீரத்தாயகத்தின் பெருமை மிகு தியாகி தோழர் பூசாரிக்கு வீரவணக்கம்!

- ஆர்.வேலுசாமி