சிதம்பரம் மேல வீதியில் விதிகளை மீறி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் அவதி
24 Mar 2026, 3:23 pm
<p><strong>சிதம்பரம் மேல வீதியில் விதிகளை மீறி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் அவதி</strong></p>
<p>சிதம்பரம், மார்ச் 24- உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் செல்லும் மேல சன்னதி வீதி பகுதி யில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவு கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வணிக வளாகங்கள் அதிகமாக இயங்கும் வேளை யில், இருசக்கர வாகனங்கள் சாலையோரங் களில் விதிகளை மீறி நிறுத்தப்படுவதால் பாத சாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேல சன்னதி வீதி வழியாகக் கோவி லுக்குத் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், சாலையின் இருபுறங்களிலும் வாகன ஓட்டி கள் தங்கள் இருசக்கர வாகனங்களை எங்கு இடம் கிடைத்தாலும் நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது. இதனால் சாலையின் அகலம் குறைந்து, ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் கூடச் சுலபமாகச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகப் பாதசாரிகள் சாலை யின் நடுப்பகுதியில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, விபத்து அபாயமும் அதி கரித்துள்ளது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும், மேல வீதி வழியாக அவசரத் தேவைக்காகச் செல்லும் உயிர் காக்கும் மருத்துவ ஊர்திகள் மற்றும் பிற அவசர கால வாகனங்களும் இப்பகுதி யில் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட் டுள்ளது. இது குறித்து இப்பகுதி வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். வாடிக்கையா ளர்கள் கடைகளுக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதால் வணிகமும் பாதிக்கப்படுவ தாக அவர்கள் கூறுகின்றனர். இது குறித்துப் பொதுமக்கள் கூறுகை யில், “சாலையோரங்களில் ‘வாகனங்கள் நிறுத்தத் தடை’ பலகைகள் இருந்தாலும் அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படு வதில்லை. போக்குவரத்துப் போலீசார் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொண்டு, தவறாக வாகனங்களை நிறுத்துபவர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அதோடு, தனியாக வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்தால் மட்டுமே இந்தப் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்தனர். ஆகையால், மேல சன்னதி வீதியில் போக்குவரத்து ஒழுங்கைச் சீர்செய்யச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.</p>
