தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

29 Nov 2025, 4:58 pm
சென்னை விரைவு செய்திகள்

லர் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

சென்னை, நவ.29- வாகன புதுப்பிப்பு கட்டண உயர்வை 10 நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் கண்டெய்னர் லாரிகளை இயக்க மாட்டோம் என டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் கோபி கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டெய்னர் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் தொடர்ந்து நட்டம் சந்தித்து வருகிறோம். 15 முதல் 20 ஆண்டு வாகனங்களுக்கு புதுப்பிப்பு கட்டணம் ரூ.850-லிருந்து ரூ.14 ஆயிரமாகவும், 20 ஆண்டுக்கு மேலானவற்றிற்கு ரூ.850-லிருந்து ரூ.28 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. ஒரு லாரிக்கு ரூ.15-20 ஆயிரம் வரை ஆன்லைன் அபராதமும் விதிக்கப்படுகிறது. 10 நாட்களுக்குள் புதிய கட்டணத்தை திரும்பப் பெறவும், ஆன்லைன் அபராதத்தை தடுக்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்க மாட்டோம் என்றார்.

வாலாஜா சுங்கச்சாவடியில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம்

ராணிப்பேட்டை, நவ.29- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் பக்கவாட்டு சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதால், சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதான கட்டண பாதைகளின் பக்கவாட்டு சாலைகள் மண் மற்றும் சரளைக் கற்களுடன் சேதமடைந்து காணப்படுகின்றன. குண்டும் குழியுமான சாலையில் வேகமாக கடந்து செல்லும் கனரக வாகனங்களுக்கு மத்தியில் இருசக்கர வாகனங்கள் செல்வது பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. வாகனக் கட்டுப்பாட்டை இழந்தால் விபத்துகள் ஏற்பட அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக தலையிட்டு, சுங்கச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் பாதுகாப்பாக செல்வதற்கு பிரத்யேகப் பாதையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவடியில் புதைசாக்கடை அடைப்பு! நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் வலியுறுத்தல்

ஆவடி, நவ.29- ஆவடி பகுதிகளில் புதைசாக்கடை அடைப்பு காரணமாக மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநக ராட்சி கூட்டத்தில் மேயர் கு.உதயகுமார் தலைமை வகித்தார். துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் ரா.சரண்யா முன்னிலை வகித்தனர். மூன்றாவது மண்டல குழுத்தலைவர் ஜி.ராஜேந்திரன், புதைசாக்கடை அடைப்பால் மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும், அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காமல் வீடுகளுக்கு மட்டும் அபராதம் விதிப்பதாகவும் கூறினார். நான்காவது மண்டல குழுத்தலைவர் என்.ஜோதிலட்சுமி நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலாவது மண்டல குழுத்தலைவர் வி.அம்மு கொசு மருந்து முறையாக அடிக்க கூடுதல் ஊழி யர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதிமுக உறுப்பினர் அ.பிரகாஷ், எல்இடி விளக்குகள் அமைக்கவும், எஸ்.சுதாகரன் (திமுக), அண்ணனூர் 60 அடி சாலை சீரமைக்கவும், காங்கிரஸ் உறுப்பினர் மேகலா சீனிவாசன், 60-க்கும் மேற்பட்ட சேதமடைந்த மேன்ஹோல்களை சீரமைக்கவும் கோரினர். ஆணையர் ரா.சரண்யா உறுப்பினர்கள் கூறிய குறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் 105 தீர்மனங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.