தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் : தூக்கிட்டு இருவர் தற்கொலை

21 Jun 2026, 4:38 pm
நீட் : தூக்கிட்டு இருவர் தற்கொலை

நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக இருவர் தர்மபுரியில் ஒரு மாணவியும், ஒசூரில் ஒரு மாணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள என்டடப்ட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவி கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார், இவர்களின் மகள் ரோஷினி(18),

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் +2 முடித்துவிட்டு, மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

நீட் தேர்விற்க்கு சொந்த ஊருக்கு வந்த மாணவி இன்று தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வை எழுத இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ரோஷனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓசூரில் மாணவர் தற்கொலை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பாகலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியத்தில் குடியிருந்து, மைவா என்னும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர் சின்னசாமி, இவருக்கு ஜீவானந்தம், வெற்றியானந்தம் என்கிற இரண்டு மகன்களில் இளைய மகன் வெற்றியானந்தம்(20) கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு படித்து வந்த நிலையில், இதுவரை எழுதிய தேர்வுகளிலும் தோல்வி அடைந்ததால் இன்று நடைபெறும் நீட் தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்

நேற்று அவரது தந்தை வழக்கம் போல வேலைக்கு சென்று விட, தாயார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டின் வரவேற்பரையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.. வீடு திரும்பி தாயார் மகன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் உயிரிழந்த வெற்றியானந்தம் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் இப்படியான பெற்றோர், சகோதரர் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன் நீட் தேர்வு பயம் காரணமான கடந்த ஒரு மாதமாக சரியாக தூங்கவே இல்லை, இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்கிற பயத்தில் தவறான முடிவை எடுப்பதாகவும் அம்மா, அப்பா, அண்ணா என்னை மன்னிக்கவும் என உருக்கமாக கடிதம் எழுத்தி வைத்துள்ளார்.

நேற்று நண்பகல் உயிரிழந்த வெற்றியானந்தம் உடல், ஓசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அட்கோ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.