திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டிய போது இரண்டு கற்சிலைகள் கண்டெடுப்பு
18 Aug 2026, 8:27 pm
<p><strong>திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டிய போது இரண்டு கற்சிலைகள் கண்டெடுப்பு</strong></p><p>திருவையாறு அருகே குளம் அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது இரண்டு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. திருவையாறு அருகே சிறுபுலியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். விவசாயியான இவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், மீன் குட்டை அமைக்க ஞாயிறு மாலை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து கரை அமைத்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளம் தோண்டும்போது பூமியிலிருந்து இரண்டு சிலைகள் தென்பட்டது. உடனடியாக பொக்லைன் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, அய்யப்பன் மற்றும் அங்கிருந்தவர்கள் கைகளாலும், கடப்பாரையாலும் தோண்டினர். அப்போது இரண்டரை அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்பாள் சிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு கற்சிலைகளையும் பத்திரமாக எடுத்து, அதனை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திங்கள்கிழமை அந்த சிலைகள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. </p>
