தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இரு மாநில காவல் அதிகாரிகள் ஆலோசனை ஈரோடு, ஏப்.10- தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, ஆளுநரில் தமிழ்நாடு-கர்நாடக மாநில காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை

11 Apr 2026, 5:30 am
இரு மாநில காவல் அதிகாரிகள் ஆலோசனை ஈரோடு, ஏப்.10- தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, ஆளுநரில் தமிழ்நாடு-கர்நாடக மாநில காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை
<p><strong>இரு மாநில காவல் அதிகாரிகள் ஆலோசனை ஈரோடு, ஏப்.10- தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, ஆளுநரில் தமிழ்நாடு-கர்நாடக மாநில காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதையடுத்து ஏப்.23 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான ஈரோடு மாவட்டம், ஆளுநரில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் சுயம்புநாதன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கர்நாடகாவிலிருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கொண்டு வருவதைத் தடுத்தல், தடையெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்து மற்றும் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், சாம்ராஜ் நகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்மினி சாஹூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இரு மாநில எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் மற்றும் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில், காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகனத் தணிக்கை குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினர்.</strong></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.