முந்தய பக்கம்

விபத்தில் சிக்கிய  ‘சுகோய்-30’ போர் விமானம்  2 வீரர்கள் பலி

6 Mar 2026, 2:41 pm
விபத்தில் சிக்கிய  ‘சுகோய்-30’ போர் விமானம்  2 வீரர்கள் பலி
<p><strong>விபத்தில் சிக்கிய &nbsp;&lsquo;சுகோய்-30&rsquo; போர் விமானம் &nbsp;2 வீரர்கள் பலி</strong></p> <p>இந்திய விமானப் படைக்குச் சொந்தமான &lsquo;சுகோய்-30 &nbsp;எம்கேஐ (Su-30 MKI)&rsquo; போர் விமானம் வியாழனன்று மாலை அசாம் மாநி லத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது. தீவிர &nbsp;தேடுதலுக்குப் பின்னர், அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதி யில் வெள்ளியன்று சுகோய்-30 விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப் பட்டது. விமானம் வெடித்துச் சிதறிக் கிடந்தது. &nbsp;விமானத்தில் பயிற்சியில் ஈடு பட்ட இரண்டு விமானப்படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த பிளைட் லெப்டினண்ட் பூர்வேஷ் துரக்கர் (நாக்பூரைச் சேர்ந்தவர்) பாகிஸ்தானுக்கு எதிரான &lsquo;ஆபரேஷன் சிந்தூர்&rsquo; நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினார் என செய்திகள் வெளியாகியுள்ளன. &nbsp;சுகோய்-30 எம்கேஐ, ரஷ்யாவின் &lsquo;சுகோய்&rsquo; நிறுவனத்தால் வடிவமை க்கப்பட்டு, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உரிமம் பெற்று தயாரிக்கப்படும் 2 இருக்கைகள் கொண்ட, பல்துறை போர் விமானம் ஆகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram