உலகக் காடுகளை உருவாக்கும் இரண்டு சதவிகித மரங்கள்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>உலகக் காடுகளை உருவாக்கும் இரண்டு சதவிகித மரங்கள்</strong></p>
<p>ஆப்பிரிக்காவின் மழைக்காடுகள் ஒரு சில இனங்களை மட்டுமே பெற்றுள்ளன. ஆனால் அவற்றின் பன்மயத்தன்மை அமேசான் மற்றும் ஆசியாவின் காடுகளை பிரதிபலிக்கிறது. உலகில் உள்ள காடுகளில் காணப்படும் இரண்டு சதவிகித இனங்கள் ஐம்பது சதவிகித மரங்களை உருவாக்குகின்றன. அமேசான் முதல் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா வரை மழைக்காடுகளின் பன்மயத்தன்மை இனங்கள் பொதுவான ஒரே விதியைப் பின்பற்றி அமைந்துள்ளன என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஒரு சில மர இனங்களும் உலகின் மழைக்காடுகளும் மழைக்காடுகளில் காணப்படும் வெறும் இரண்டு சதவிகித மர இனங் கள் ஆப்பிரிக்கா, அமேசான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண் டலக் காடுகளில் உள்ள ஐம்பது சதவிகித இன மரங்களை உருவாக்கு கிறது. இதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒரே மாதிரியான விதியே இயற்கையில் பின்பற்றப்படுகிறது. மற்ற ஆயிரக்கணக்கான அரிய வகை மரங்கள் மீதமுள்ள காட் டை உருவாக்க, ஒரு சில மர இனங் களே உலகின் முக்கிய மழைக் காடுகளில் முதன்மையாக உள்ளன என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். இந்த ஆய்வுகள் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் (UCL) சேர்ந்த ஆய்வாளர்கள் தலைமையில் நடந்தன. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளிவந்துள்ளது. சர்வதேச அளவில் 356 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து ஆய்வுகளை நடத்தியபோது பூமியின் பன்மயச்செழுமை மிக்க உலக மழைக் காடுகளில் ஒரே மாதிரி பன்மயத்தன்மை பாணியில் (tree diversity patterns) மரங்கள் அமைந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. வெறும் ஆயிரம் இனங்கள் பூமியின் வெப்பமண்டல மழைக்காடுகளின் 800 பில்லியன் மரங்களில் பாதியை உருவாக்குகின்றன என்று ஆய்வாளர் கள் மதிப்பிட்டுள்ளனர். 46,000 இனங்கள் மீதிக் காட்டை உருவாக்குகின்றன. “இந்த கண்டு பிடிப்பு வெப்பமண்டலக் காடுகள் பற்றிய நமது புரிதலில் ஆழமான தாக் கம் செலுத்தக்கூடியது. மிகப் பொது வாகக் காணப்படும் மர இனங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால் ஒட்டுமொத்த காடும் இன்று வேகமாக மாறும் காலநிலைக்கேற்ப எவ்வாறு பதில்வினை புரியும் என்பதை நம்மால் கணிக்கமுடியும். வெப்பமண்டலக் காடுகள் அபரி மிதமான அளவில் சேமித்து வைக்கப் பட்டுள்ள கார்பனைக் கொண்டிருக் கின்றன. இதனால் அவை உளகளவில் முக்கியத்துவம் வாய்ந்த கார்பன் தொட்டிகள். அதனால் இந்த ஆய்வு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் லண்டன் பல்கலைக்கழக உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி யுமான டெக்லன் கூப்பர் (Declan Cooper) கூறுகிறார். அமேசான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ளவற்றுடன் ஒப்பிடும் போது ஆப்பிரிக்காவில் உள்ள மழைக் காடுகள் ஒரு சில இன மரங்களை மட்டு மே பெற்றுள்ளன. என்றாலும் அவற் றின் உயிர்ப் பன்மயத்தன்மை ஒரே பாணியில் அமைந்துள்ளது. இந்த ஆய்வுகள் மழைக்காடுகள் உள்ள 1,568 இடங்களில் 2,048 ஹெக்டேர்/5,050 ஏக்கர் பரப்பில் காணப்படும் ஒரு மில்லியன் மரங்களின் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப் பட்டன. உயிர்த்தொகுப்பின் (Biome) 2.2% உயிரினங்கள் 50% மரங்களால் ஆனது. “அமேசான் மற்றும் தென் கிழக்கு ஆசிய மழைக்காடுகளுடன் ஒப்பிடும்போது ஆப்பிரிக்க மழைக் காடுகள் பல இன மரங்களைக் கொண்ட வையல்ல. ஆனால் இப்பகுதிகளில் வாழும் மர இனங்களின் விகிதம் பொதுவானது. இது உலகின் வெப்ப மண்டல மழைக்காடுகள் ஒரே மாதிரி விதிகளைப் பின்பற்றுகின்றன என்ப தை எடுத்துக்காட்டுகிறது” என்று கேமரூன் யயோண்டே (Yaoundé) பல்கலைக்கழக பேராசிரியர் பொனவெஞ்ஜர் சன்க்கே (Prof Bonaventure Sonké) கூறுகிறார். உலக வெப்பமண்டலக் காடுகள் அனைத்தும் ஒரு செயல்முறையின் கீழ் இயங்குகின்றன என்பது இதில் இருந்து தெரிகிறது என்று விஞ்ஞானிகள் கருது கின்றனர். ஆய்வுகள் நடத்தப்பட்ட காடு களின் நிலவியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு அவை பின்பற்றும் பொதுவான விதியை அடையாளம் காண வருங்கால ஆய்வுகளை மேற் கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள் ளனர். அமேசான் மற்றும் தென்கிழக்கு ஆசியக் காடுகளை காட்டிலும் ஆப்பி ரிக்க மழைக்காடுகள் வறண்ட மற்றும் குளிர்ச்சியான காலநிலையைக் கொண்டுள்ளன. புதிய கண்ணோட்டம் தென்கிழக்கு ஆசியக் காடுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தொடர் புகளற்ற தீவுகளில் பரவியுள்ளன. அமேசான் காடுகள் பெரும் பரப்பில் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. மற்ற இரு பிரதேசங்களை விட இங்கு மனிதர்கள் குறைவான காலத்திற்கே வாழ்கின்றனர். “நமக்கு எதுவும் தெரியாத பல ஆயிரம் இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும் மிகப்பொதுவாகக் காணப்படும் சில நூறு மர இனங்களை மையமாகக் கொண்டு வெப்பமண்டலக் காடுகளை புதிய கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும். இது மதிப்புமிக்க இந்த காடுக ளைப் பற்றிய நமது புரிதலில் புதிய வழியைத் திறந்துவிடும். மிகப் பொது வான மர இனங்களுக்குக் கொடுக் கப்படும் முக்கியத்துவம் அரிய வகை மர இனங்களின் பாதுகாப்பை பாதிக் கும் வகையில் அமையக்கூடாது. ஆனால் விரைவான, முக்கிய தகவல் கள் மிகப்பொதுவாக உள்ள மர இனங் களை அறிவியல்ரீதியில் ஆராய்வதன் மூலம் நமக்குக் கிடைக்கும்” என்று ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரி யரும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி புவியியல் பள்ளி பேராசி ரியரும் லீட்ஸ் (Leeds) பல்கலைக் கழக ஆய்வாளருமான பேராசிரியர் சைமன் லூயிஸ் (Prof Simon Lewis) கூறுகிறார். பூமியில் அனைத்து உயிரினங் களுக்கும் உயிர்நாடியாக இருக்கும் காடுகளைக் காப்பதில் இந்த ஆய்வு கள் முக்கியப்பங்கு வகிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.</p>
