ஏடிஎம் முன் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த இருவருக்குப் பாராட்டு
29 May 2026, 11:42 pm
<p><strong>ஏடிஎம் முன் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த இருவருக்குப் பாராட்டு</strong> </p><p>கள்ளக்குறிச்சி, மே 29- சங்கராபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் முன்பு கீழே கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த இருவருக்குப் பொதுச்சேவை அமைப்பினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்க வந்த சங்கராபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு ஆகியோர், ஏடிஎம் வாசலில் தங்கச் சங்கிலி கீழே கிடப்பதைக் கண்டனர். அந்தச் சங்கிலியை எடுத்த இருவரும், அப்பகுதியில் விசாரித்தபோது சற்று முன் ஏடிஎம்-க்கு வந்த பெண்மணி ஒருவர் அதைத் தவறவிட்டது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண்மணியைத் தொடர்புகொண்டு, அடையாளங்களை உறுதி செய்த பின்னர் தங்கச் சங்கிலியை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இவர்களின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி, பொதுசேவை அமைப்பினர் ராஜ்குமார் மற்றும் தென்னரசு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.</p>
