தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டி தமிழக அணியில் 2 லயன்ஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு

8 Oct 2026, 9:22 pm
தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டி  தமிழக அணியில் 2 லயன்ஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு

தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டி தமிழக அணியில் 2 லயன்ஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு

திருவில்லிபுத்தூர், அக்.8-2026–27 கல்வியாண்டுக்கான 77வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து தெரிவுப் போட்டி திண்டுக்கல் சி.எஸ்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளியில் அக்.3-ஆம் தேதி நடைபெற்றது.இதில் 8 மண்டலங்களில் இருந்து தலா 6 வீரர்கள் வீதம் 48 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சிவா அக்ஷய் குமார், முகுந்தன் ஆகியோர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் டிச.8 முதல் 13-ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் தேசியப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர்.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டும் தமிழக அணிக்கு தேர்வான நிலையில், இந்த ஆண்டு இரு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பள்ளித் தாளாளர் ஆர்.வெங்கடாஜலபதி, இயக்குநர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சண்முகவேல், துணைமுதல்வர் புவனா, பயிற்சியாளர் ஜோதிபாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.பூ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.