தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பகத்சிங்கின் இரண்டு கடிதங்கள்!

28 Mar 2026, 4:13 pm
பகத்சிங்கின் இரண்டு கடிதங்கள்!
<p><strong>பகத்சிங்கின் இரண்டு கடிதங்கள்!</strong></p> <p>மாவீரன் பகத்சிங் பன்முகத் தன்மை கொண்ட புரட்சியாளன், இந்தியா சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட நாடாக மலர தன்னுயிறைத் தத்தம் செய்தவன், அவனது அர்ப்பணிப்பு உணர்வும் அன்பு உள்ளமும் வெளிப் படும் இரண்டு கடிதங்கள் இங்கே: என் வாழ்க்கை விடுதலைக்காக&hellip; 1923, பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன் சிங் மிகவும் தீவிரமாக தன் மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இது தெரிய வந்ததும் அவர் மிகவும் அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்: &nbsp;மதிப்பிற்குரிய தந்தைக்கு வணக்கம், என் வாழ்க்கை ஏற்கெ னவே ஒரு உன்னதமான லட்சியத் திற்காக இந்தியாவின் விடுத லைக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே வாழ்க்கை வசதிகளும் உலக இன்பங் களும் எனக்கு வசீகரிக்கவில்லை. எனக்கு புனித நூல் அணியும் வைபவத்தின்போது நான் மிகவும் சிறுவனாக இருந்த போது பாபுஜி (தாத்தா) என்னை நாட்டின் சேவைக் காக அர்ப்பணிப்பதாக சத்தியம் செய்ததை தாங்கள் நினைவு கூர வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். எனவே அவரது சத்தியத் திற்கு மதிப்பளிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். காதல் ஒருபோதும் &nbsp;மனிதனை தரம் தாழ்த்தாது! காதலைப் பற்றி சுகதேவுக்கு எழுதிய கடிதம்: 1929 ஏப்ரல் 5 அன்று, இக்கடி தம் உனக்கு கிடைக்கும்போது வெகு தூரத்திற்கு நான் போய் இருப்பேன். முன்பைவிட நான் மிகவும் மகிழ் வோடு இருக்கின்றேன் என்று உறுதி யாகச் சொல்கிறேன். இன்று வரை என் இதயத்தில் ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுத்திக் கொண்டிருக்கிறது. சொந்த சகோதரன் என்னை தவ றாக புரிந்து கொண்டு, என்னை பலவீனமானவன் என்ற &nbsp;மிகக் கடுமை யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருப்பது தான். என்று எனக்கு ஒரு முழு திருப்தி என்னிடம் மட்டுமே வெளிப்படைத் தன்மை, நான் ஒரு அதிகப் பிரசங்கி என்றும் என் குறை கள் பற்றி என் ஒப்புதல் வாக்குமூ லங்கள் என்னை பலவீனமானவன் என்றும் ஒரு பொருள் கொள்ளப் படுகின்றன. நான் பலவீனமானவன் அல்ல. நம்மில் எவரை விடவும் நான் பல வீனமானவன் அல்ல, நான் தெளி வான இதயத்துடன் பேசுகிறேன், நீயும் தெளிவாகத்தான் இருக்கிறாய். &nbsp;உன் அன்பை புலப்படுத்துவதாக இருக்கட்டும். எனக்கு வாழ்க்கை யின் கவர்ச்சிகளை அனுபவிக்க வேண்டும் என்கிற ஒரு ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் குறைந்து விடவும் என்னால் முடியும். அதுதான் என்னுடைய உண்மையான தியாகம். &nbsp;காதலின் ஒழுக்க நிலையைப் பொறுத் தவரை அது உணர்ச்சிகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நான் சொல்வேன். &nbsp;அது மிருக உணர்ச்சி அல்ல. மாறாக அது மனித உணர்ச்சி. &nbsp;காதல் ஒரு போதும் மிருக உணர்ச்சி ஆகாது. காதல் எப்போதும் மனிதனின் குணநலன் களை உயர்த்தவே செய்யும். அவனை ஒருபோதும் தரம் தாழ்த்தாது. நாம் பொதுவாக திரைப்படங்களில் பார்ப்பது போன்று காதலர்களை உண் மைக் காதலை எவரும் உருவாக்க முடியாது. அது தானாகவே வரும். அது எப்பொழுது வரும் என்று எவருக்கும் சொல்ல முடியாது. ஆனால் அது இயற்கையானது என்று நான் உனக்கு சொல்கிறேன். நாம் முற்போக்கு சிந்தனைகளை மட்டும் கொண்ட வர்களாக இருந்தாலும், ஆரியமா யையில் மிதமிஞ்சிய கற்பனைவாத ஒழுக்க நெறிமுறைகளை நம்மால் கண்டிக்க முடியவில்லை. &nbsp;அனைத்து புரட்சிகரக் கருத்துகள் குறித்தும், எவ்விதத் தங்கு தடை இன்றி வாய் நிறைய பேசுகிறோம். ஆனால் நடைமுறையில் எடுத்த எடுப்பிலே நடுங்கத் தொடங்கி விடுகிறோம். இந்த போக்கை விட்டுவிட வேண்டும் என்று உன்னை நான் கேட்டுக்கொள்கிறேன். என் மனதில் ஏற்பட்ட தவறான எண் ணங்களின் விளைவாக ஏற்பட்ட அச்சத் தால் நான் உன்னை கேட்டுக்கொள் கிறேன். உன்னுடைய அதீத கற்பனை வாதத்தை சற்று குறைத்துக் கொண்டு என்னைப் போன்ற பலவீன நோய்க்கு உள்ளானவர்களிடம், மிகவும் பின்த ங்கிய நிலையில் உள்ளவரிடம் கடுமை யாக நடந்து கொள்ளாதே. &nbsp;எந்த ஒருதனி நபரிடமும் எந்த வித மான காழ்ப்புணர்ச்சியும் இன்றி அன்பு தேவைப்படுகிறது. நீ முழுமை யாகப் புரிந்து கொள்ளமுடியாது. இருந் தும் ஏன் எழுதுகிறேன் ஏன் என்றால் நான் உன்னிடம் மிகவும் வெளிப்படை யாக இருக்க விரும்புகிறேன். அனைத்து வெற்றிகளையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையும் &nbsp;பெற வாழ்த்துகள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.