தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கான இரட்டை இலை சின்ன பதாகைகள் பறிமுதல்

26 Mar 2026, 2:46 pm
கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கான  இரட்டை இலை சின்ன பதாகைகள் பறிமுதல்
<p><strong>கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கான &nbsp;இரட்டை இலை சின்ன பதாகைகள் பறிமுதல்</strong></p> <p>தேனி, மார்ச் 26- கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்துக் காக கொண்டு செல்லப்பட்ட இரட்டை இலைச் சின்னம் அச்சிடப்பட்ட ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள பதாகைகள் ஆண்டி பட்டியில் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி - மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் தேர்தல் &nbsp;பறக்கும் படை அதிகாரிகள் வியாழனன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது மதுரையில் இருந்து தேனி &nbsp;நோக்கி வந்த ஒரு சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் கேரள மாநில நீர் &nbsp;வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் உருவப்படம் மற்றும் மலையாள மொழி யில் அச்சிடப்பட்ட ஆயிரக்கணக்கான தேர் &nbsp;தல் பிரச்சார பதாகைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அதில் இரட்டை இலைச் சின்னமும் அச்சிடப்பட்டிருந்தது. கேரளாவில் உள்ள கட்சியில் இரட்டை &nbsp;இலை சின்னம் இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். இதனைத் தொட ர்ந்து வண்டியில் வந்தவர்களிடம் விசாரித்த னர். இதில், மதுரையில் அச்சிடப்பட்ட பதா கைகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட &nbsp;பிரச்சாரத்துக்காக கொண்டு செல்லப்படு வது தெரியவந்தது. கேரளாவில் இடது ஜன நாயக முன்னணி கூட்டணியில் உள்ள கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியின் சின்னம் &nbsp;இரட்டை இலை ஆகும். ஆகவே அச்சின் &nbsp;னம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இருப்பினும் இந்தப் பதாகைகளை கொண்டு செல்வதற்கான உரிய ஆவ ணங்களோ அல்லது தேர்தல் ஆணையத் &nbsp;தின் அனுமதியோ வாகனத்தில் இருந்த வர்களிடம் இல்லை. இதையடுத்து, சுமார் &nbsp;ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பதாகை களையும், இதனை கொண்டு வந்த வாக னத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் &nbsp;அனைத்தும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப் பட்டன. தமிழகத்தில் அதிமுகவின் அடையாள மான இரட்டை இலை சின்னம் பொறித்த பதாகைகள் கேரள மாநிலத் தேர்தலுக்காக கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.