முந்தய பக்கம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலகாயம்

10 Apr 2026, 5:30 am
பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலகாயம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலகாயம்

தருமபுரி, ஏப்.9- மாரண்டஅள்ளி சாலையில் தனியார் பள்ளி வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் கிரிதட்டஅூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் (27), கோவரசு (20) மற்றும் வினோத் குமார் (28) ஆகியோர் கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாரண்டஅள்ளி-அ.மல்லாபுரம் சாலையில் வந்தபோது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில் கோவரசு மற்றும் வினோத் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அருண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram