பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலத்த காயம்
10 Apr 2026, 5:30 am

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலத்த காயம்

தருமபுரி, ஏப். 9- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே உள்ள கரிக்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (20), நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனகட்டு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் மகன் வினோத்குமார் (28) ஆகிய இருவரும், சிவகாசி கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.