முந்தய பக்கம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

10 Apr 2026, 5:30 am
பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

தருமபுரி, ஏப். 9- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி அருகே உள்ள கரிக்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் அன்பு (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் கரிக்கட்டூரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கோவரசு (20).

நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் வினோத்குமார் (28) ஆகியோருடன், சிவகாசி கிராமத்தில் அமைந்துள்ள நடுகல் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்றுள்ளனர். திருவிழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அன்பு மற்றும் கோவரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வினோத்குமார் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram