கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
16 Mar 2026, 4:46 pm

அவிநாசிக்கு இரண்டு பறக்கும் படை ஒரு நிலை கண்காணிப்புக் குழு

அவிநாசி, மார்ச் 16- தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள நிலையில், அவி நாசிக்கு இரண்டு பறக்கும் படை மற்றும் ஒரு நிலை கண்கா ணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவிநாசி சட்டப் பேரவை தொகுதியில் ஆண் வாக் காளர்கள் 1,19,841, பெண் 1,30496, இதர வாக்காளர் 9, மாற்றுத் திறனாளிகள் 1, 786, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2030 என மொத்தம் 2, 50346 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 40 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட வர்கள் விருப்பத்தின்படி வீட்டிலேயே வாக்களிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவிநாசி தொகு திக்குட்பட்ட அன்னூரில் 139 வாக்குச்சாவடி, அவிநாசியில் 233 என மொத்தம் 372 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் சீல் வைக்கப்பட் டது. இதேபோல பறக்குபடையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் அனைத்து பகு தியிலும் சோதனையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். குறிப்பாக ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்ப டுத்தப்பட்டது.

அவிநாசியில் பறக்கும்படையினர் சோதனை ரூ.16.69 லட்சம் பறிமுதல்

அவிநாசி, மார்ச் 16 - அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங் களில் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவிநாசி சூளை பேருந்து நிறுத்தம் அருகே காரில் வந்த சக்திகுமார் என்பவரது வாகனத்தை சோதனை மேற்கொண்டதில், அவரிடம் உரிய ஆவணங்க ளின்றி இருந்த ரூ.1,14,800 பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் அவிநாசி நம்பியூர் சாலை சாவக்கட்டுப்பாளையம் பகு தியில் காரில் வந்த பழனிசாமி என்பவரது வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் அவரிடம் உரிய ஆவணங்க ளின்றி இருந்த ரூ.1,55,100 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோமனூர் பிரிவு அருகே காரில் வந்த கோவை வடவள்ளி பெரியபுத்தூர் செங்ககாடு தோட்டத்தைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவரது வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் அவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.14, லட்சம் பறிமு தல் செய்யப்பட்டது. அவிநாசியில் 3 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை மொத்தம் ரூ.16 லட்சத்து 69 ஆயிரத்து 900 ஐ தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் கருவூலத் தில் செலுத்தப்பட்டது.

ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்

உடுமலை,மார்ச்.16- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுள் ளது. இந்நிலையில், உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் சிந்திலுப்பு பகுதியில், பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அன்னூர் பகு தியில் இருந்து உடுமலைப்பேட்டை நோக்கி தனியார் நிறுவன மேலாளர் விஜயகுமார் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரி டம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை வட்டாட்சியர் கௌரி சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப் பட்டது.

டிஎன்பிஎஸ்சி குரூப் முதன்மைத் தேர்வு 338 பேர் எழுதினர்

திருப்பூர், மார்ச் 16- திருப்பூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதன் மைத் தேர்வை ஞாயிறன்று 338 பேர் தேர்வு எழுதினர். 15 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-2 மற்றும் 2ஏ பத விகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட தேர்வுகள் ஞாயிறன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 365 பேர் விண்ணப்பம் செய் திருந்தனர். திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. 365 பேர் தேர்வு எழுது வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரையிலும் நடைபெற்ற தேர்வினை 181 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 169 பேர் எழுதினர். 12 பேர் தேர்வு எழுதவில்லை. பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணி வரையிலும் நடைபெற்ற இரண்டாம் அமர்வு தேர்வை 184 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 169 பேர் எழுதினர். 15 பேர் தேர்வு எழுத வரவில்லை. இரண்டு அமர்வுக ளிலும் மொத்தமாக 338 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நடை பெறுவதை முன்னிட்டு முறைகேடுகளை தவிர்க்க பறக்கும் படை அலுவலர்கள் தேர்வு மையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையத்திற்கு வெளியே காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

ஈரோடு, மார்ச் 16- ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்னி மலை, அம்மாபாளையத்தைச் சேர்ந்த மணி மகன் பாபு என்ப வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்பு திங்க ளன்று வழங்கப்பட்டது. அதில் குற்றவாளியான பாபு விற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

கோவை, மார்ச் 16- தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதிகளில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம், அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளி யாகி அப்பகுதி விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தடா கம், கணுவாய், பன்னிமடை, வரப்பாளையம் மற்றும் நஞ் சுண்டாபுரம் ஆகிய இடங்களில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் மற் றும் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர் களை தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வரப்பாளையம் கிராமத்திற்குள் ஞாயிறன்று நள்ளிரவில் புகுந்த ஏராளமான காட்டுப்பன்றி கள், அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் பிற விவசாயப் பயிர்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தி யது. காட்டுப்பன்றிகள் கூட்டமாக சுற்றித் திரிந்து விளை நிலத்தை சேதப்படுத்தும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. காட்டுப்பன்றிகளின் இந்தத் தொடர் அட்டகாசத்தால் தங்க ளது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக் கும் விவசாயிகள், வனத்துறையினர் இப்பகுதிகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு, காட்டுப்பன்றிகள் ஊருக்குள் புகு வதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பாலியல் அத்துமீறல் கைது

சேலம், மார்ச் 16- போதையில் மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய் தனர். சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்குட் பட்ட பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஞாயிறன்று தேநீர் குடிப்பதற்காக வந்த போது, அதே பகுதியில் கஞ்சா மற்றும் மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலுக்கு முயற்சித் துள்ளனர். அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சல் போட்ட தால் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைய டுத்து மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்ற இளைஞரை காவல்துறையி னர் கைது செய்துள்ளனர். மற்றொருவரை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளால் கடும் அவதி தொழிற்துறையினருக்கு விலக்களிக்க கோரிக்கை

கோவை, மார்ச். 16- தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந் துள்ள நிலையில், உரிய ஆவணங் கள் இன்றி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்ல விதிக் கப்பட்டுள்ள தடையால் சிறு வணி கர்கள் மற்றும் குறுந்தொழில் முனை வோர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் விதி களின்படி, பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்ற னர். இதன் காரணமாக, அன்றாடத் தொழில் நிமித்தமாக பணத்தை கொண்டு செல்லும் சிறு வியாபாரி கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் குறுந்தொழில் செய்பவர் கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி யுள்ளனர். முறையான வங்கிப் பரி வர்த்தனைகள் செய்ய இயலாத சூழ லில் உள்ள பல சிறு தொழிலாளர் கள், தங்களது கூலி மற்றும் மூலப் பொருள் கொள்முதலுக்காகக் கொண்டு செல்லும் பணத்தை பறக் கும் படையினர் பறிமுதல் செய்வ தாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளிக்கப்பட்டது. அதில், ”சிறு வியாபாரிகள் மற்றும் குறுந்தொழில் செய்பவர்கள் அன் றாடத் தேவைக்காக ரூபாய் இரண்டு லட்சம் வரை ரொக்கம் கொண்டு செல்ல உரிய விலக்கு அளிக்கப்பட வேண்டும். முறையான தொழில் அடையாள அட்டை அல்லது கொள் முதல் ரசீதுகளை காண்பிக்கும் பட் சத்தில், அவர்களை துன்புறுத்தா மல் அனுமதிக்க வேண்டும். மேலும், பறிமுதல் செய்யப்படும் பணத்தை மீண்டும் பெறுவதில் உள்ள சிக்க லான நடைமுறைகளை எளிமைப்ப டுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தொழில்துறையினரின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு நெகிழ் வுத்தன்மையுடன் செயல்பட வேண் டும்” என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.