தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சின்னமனூர் அருகே வேன் மோதிய விபத்தில் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர் இருவர் பலி

2 Jan 2026, 3:33 pm
சின்னமனூர் அருகே வேன் மோதிய விபத்தில்  பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர் இருவர் பலி
<p><strong>சின்னமனூர் அருகே வேன் மோதிய விபத்தில் &nbsp;பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர் இருவர் பலி</strong></p> <p>தேனி ,ஜன.2- சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் பாத யாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மோதியதில் இருவர் &nbsp;சம்பவ இடத்திலேயே பலி யாகினர். தேனி மாவட்டம், ஆண்டி பட்டி மேலத் &nbsp;தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி ( 55) தலைமையில் &nbsp;ஏழு பேர் சபரிமலை ஐயப்பனுக்கு வியாழனன்று இரவு &nbsp; ஆண்டி பட்டியிலிருந்து புறப்பட்டு பாதயாத்திரையாக &nbsp;நடந்து சென்றனர். அதிகாலை 2.45 &nbsp;மணியளவில் சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சந்தி யா கார்டன் பகுதியை கடந்து சென்ற போது , திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலபாடியூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மோதியது .இந்த விபத்தில் பாதயாத்திரை சென்ற ஆண்டிபட்டி மேல தெருவை சேர்ந்த மாரிச்சாமி (55),ஆண்டிபட்டி எஸ்.கே.எஸ் பள்ளி தெருவை சேர்ந்த பாலு மகன் ராம்கி (35) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து,தூக்கி எறியப்பட்டு &nbsp;சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வேன் ஓட்டுநர் வேடசந்தூர் தாலுகா, மேலபாடியூரைச் சேர்ந்த &nbsp;கந்தசாமி மகன் தினேஷ் குமார் (34) என்பவர் மீது சின்னமனூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் வேல் மணிகண்டன் &nbsp;வழக்குப் பதிவு செய்து &nbsp;விசாரணை நடத்தி வருகிறார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.