2 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் படுகொலை : மணிப்பூரில் பதற்றமான சூழல்
11 Jul 2026, 8:41 pm

2 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் படுகொலை : மணிப்பூரில் பதற்றமான சூழல்

இம்பால் பழமையான மற்றும் முக்கியமான துணை ராணுவப் படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படை, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் முகாமிட்டுள்ளது.

இது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஆனால் செயல்பாட்டு நிர்வாகக் கட்டுப்பாடு இந்திய ராணுவத்திடம் உள்ளது.

இந்நிலையில், ஜூலை 6ஆம் தேதி மணிப்பூ ரின் உக்ருல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நுங்ஷாங் கோங் பகுதியில், அசாம் ரைபிள்ஸ் படையினரின் வாகன அணிவகுப்பு மீது மர்ம நபர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் வாரண்ட் அதிகாரி பல்வந்த் சிங், ஹவில்தார் சி.எம். சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் கண்டறியவும், மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைக் கைப்பற்றும் நடவடிக்கை என்ற பெயரில் உக்ருல் மாவட்டம் முழுவதும் அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மணிப்பூர் காவல்துறை இணைந்து மிகப் பெரிய தேடுதல் வேட்டையைத் தொடங்கி யுள்ளன. ஆனால் இந்த தேடுதல் வேட்டைக்கு உக்ருல் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக உக்ருல் மாவட்டத்தின் நுங்ஷாங் கோங் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறு கையில்,“2 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அப்பாவி மக்களின் வீட்டிற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினர் அடாவடி யாக சோதனை செய்து வருகின்றனர். நள்ளி ரவில் கூட சோதனை நீடிக்கிறது.

இதனை எப்படி ஏற்க முடியும்? சோதனை தொடர்ந்தால் கண்டிப்பாக போராட்டம் வெடிக்கும்” என எச்சரித்துள்ளனர்.

இதனால் மணிப்பூரில் அடுத்தகட்ட பதற்றம் சூழ்ந்துள்ளது.

பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக மெய்டெய் மற்றும் குக்கி-சோ இனக் குழுக்களுக்கிடையே நடைபெற்று வரும் இனக்கலவரத்தால் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.