கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
9 Feb 2026, 3:02 pm

இரு தொழிலாளர்கள் கொலை

திருப்பூர், பிப்.9- உடுமலை மற்றும் குன்னத்தூர் பகுதியில் இரு வேறு சம்பவங்களில் இரண்டு தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர் பாக அதே பகுதிகளை சேர்ந்த 9 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று திருப்பூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. உடுமலை வெனசப்பட்டியில் விசாகா இண்டஸ்ட்ரி நிறுவனத்தில் புலம் பெயர்ந்த ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்ற னர். அவர்கள் தங்கி இருக்கும் விடுதியில் ஒடிசா தொழி லாளி பாடல்களை சத்தமாக இசைத்துள்ளார். உத்தரப் பிரதேச தொழிலாளி ஒருவர் இதைப் பற்றி கேள்வி எழுப்பினார். இதையடுத்து இருதரப்பு தொழிலாளர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே ஒடிசா தொழிலாளர்கள் ஏழு பேர் சேர்ந்து உத்தரப் பிர தேச தொழிலாளர்கள் மூன்று பேரை தாக்கியுள்ளனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரெலி மாவட் டத்தை சேர்ந்த சல்மான் என்பவர் பரிதாபமாக உயிரி ழந்தார். இதையடுத்து உடுமலை காவல் நிலையத்தி னர், இச்சம்பத்தில் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்தனர். அதேபோல் குன்னத்தூர் பகுதியில் ஶ்ரீ ரத்தினம் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள் மூன்று பேர் அவர்கள் தங்கி இருந்த அறையில் வாக்குவாதம் செய்து கை கலப்பில் ஈடுபட்டனர். இதில் ஒடிசா மாநில பாலங்கீர் மாவட் டத்தை சேர்ந்த அமித் நாக் என்பவர் கொலை செய் யப்பட்டார். இதையடுத்து குன்னத்தூர் காவல் துறை யினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தி, தொடர்புடைய ஒடிசா மாநிலத்தின் இரு தொழிலாளர்களை கைது செய்தனர். இந்த இரு சம்பவங்களும் தொழிலாளர்களுக் கிடையே ஏற்பட்ட தகராறு மூலமாக நடைபெற்றுள் ளது. இரு சம்பவங்களிலும் ஒன்பது பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். சட்டப்படி தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை திங்களன்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் கத்தி பறிமுதல்!

கோவை, பிப். 9- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து கத்தி, புகையிலை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்களன்று மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், மனு அளிக்க மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். பல நேரங்களில் ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் சமீபகாலமாக மனு அளிக்க வருபவர்கள் திடீரென தீக்குளிக்க முயற்சிப்பதும், அவ்வப்போது வரும் வெடிகுண்டு மிரட்டல்களும் பெரும் சவாலாக இருந்து வருகின்றன. இதனை யொட்டி, அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உள்ளே வருப வர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதித்தனர். அப்போது, மனு அளிக்க வந்த சிலர் மறைத்து வைத்திருந்த கத்திகள், புகையிலை பொருட் கள், தீப்பெட்டிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து களை போலீசார் கண்டறிந்தனர். மேலும், இருசக்கர வாகனங்களுக்கு பயன்ப டுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் மற்றும் சில பெண் கள் கொண்டு வந்த அழகு சாதனப் பொருட்களையும் பாதுகாப்பு கருதி போலீசார் பறிமுதல் செய்தனர். பறி முதல் செய்யப்பட்ட பொருட்களை ஒரு தனி இடத்தில் வைத்த போலீசார், “மனுக்களை அளித்துவிட்டு வெளியே வரும்போது உங்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அறிவுறுத்தி பொதுமக் களை உள்ளே அனுப்பினர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தீவிர சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

நாமக்கல் பிப்.9- பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை தீய ணைப்பு நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக் கான தீ பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. பல்வேறு தனியார் துறை அலுவலகங்கள், தனி யார் நிறுவனங்களில், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும்? உடனடி நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான பயிற்சியை தனியார் பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்டது. தனியார் துறை பாதுகாவலர்களுக்கு வெப்படை தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் பயிற்சிகள் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு கட்டங் களாக தனியார் துறை பாதுகாவலர்களுக்கு பயிற்சி கள் வழங்கப்படும் என தீயணைப்பு துறை அலுவல கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா கேட்டு பட்டியலின மக்கள் மனு

தருமபுரி, பிப்.9- இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி, நார்தம்பட்டியை சேர்ந்த பட்டிய லின மக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யத்தில் நார்தம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கு, 1997 ஆம் ஆண்டு ஏ.ரெட்டிஅள்ளி வருவாய் கிராம புல எண் 440/1பி1,1பி2 வில் 7.73 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆர்ஜிதம் செய்தது. இதன்பின் 134 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு என்எச்-7 விரிவாக்கம் செய்த போது, இவ்விடம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுக்கப்பட்டது. மீதமிருக்கும் இடம் புல எண் 440/1பி1சியில் 8,300 சதுர மீட்டர் இடத்தில், நார்தம்பட்டி மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 15 வருடங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், ஜன.31 ஆம் தேதியன்று இவ்விடத்தில் தனி நபர்கள் சட்ட விரோதமாகவும், அராஜக மான முறையில் ஆக்கிரமிப்பு செய்து, கல் நட்டு முள்வேலி அமைத்துள்ளனர். அதனை அகற்றி, எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஈரோடு, பிப்.9- தாளவாடியில் விவசாயத் தோட்டத்திற்குள் நுழைந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட விவசாயி, யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழக - கர்நாடகா எல்லையான தாளவாடி மலைப்பகுதி யில் யானைகள், விவசாய நிலங்களுக்கள் புகுந்து, பயிர் களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு யானைகளை விரட்டி வருகின்ற னர். இந்நிலையில், கரளவாடி கிராமத்துக்குள் 10க்கும் மேற் பட்ட யானைகள் ஞாயிறன்று அதிகாலை நுழைந்ததை கண்ட அப்பகுதி விவசாயிகள், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரளவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மகேஷ் (28) என்பவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் குறித்து தாளவாடி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் மூடல்

திருப்பூர், பிப்.9- டாஸ்மார்க் ஊழியர்கள் தமிழ்நாடு முழு வதும் திங்களன்று நண்பகல் 12 மணியிலி ருந்து 3 மணி வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காலி பாட்டில்களை திரும்பப் பெறுவ தற்கு ஊழியர்களைக் கட்டாயப்படுத்து வதை எதிர்த்தும், தனி ஊழியர்களை நிய மிக்கவும், நீண்ட காலமாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று மணி நேரம் மதுபானக் கடை யடைப்புப் போராட்டம் திங்களன்று நடைபெற்றது. திருப்பூரில் டாஸ்மாக் மது பான கடை திறக்கக்கூடிய நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கடைய டைப்பு செய்து தங்கள் கோரிக்கையை வலியு றுத்தி எதிர்ப்பை பதிவு செய்வது என்று முடிவு செய்தனர். அதன்படி திருப்பூர் மாவட் டத்தில் மொத்தமுள்ள 227 அரசு மதுபானக் கடைகளில் மொத்தம் 120 கடைகளில் விற்ப னையை தொடங்காமல் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதி யில் உள்ள டாஸ்மார்க் கடைகள் அனைத்தை யும் 3 மணி நேரம் மூடி டாஸ்மாக் ஊழியர் கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர்.