முந்தய பக்கம்

தமுஎகச சார்பில் இலக்கியச் சந்திப்பு

2 Nov 2026, 12:37 am
தமுஎகச சார்பில் இலக்கியச் சந்திப்பு
<p><strong>தமுஎகச சார்பில் இலக்கியச் சந்திப்பு</strong></p><p>கோவை, நவ.1-கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 277 ஆவது இலக்கியச் சந்திப்பு மற்றும் நூல்கள் அறிமுக நிகழ்வு ஞாயிறன்று நடைபெற்றது. தாமஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்விற்கு புலவர் இரா. பானுமதி தலைமை வகித்தார். கவிஞர் மனோ பாபு வரவேற்றார். தொடர்ந்து எஸ்.சரத்குமார் எழுதிய ‘சிக்பண்ட் ஃப்பிராய்ட் - வாழ்வும் உளவியலும்’ நூல் குறித்து சங்க மாவட்டச் செயலாளர் அ.கரீம் அறிமுக உரையாற்றினார். மருத்துவர் எஸ்.சரத்குமார் ஏற்புரையாற்றினார். எழுத்தாளர் புன்னகை பூ ஜெயக்குமார் எழுதிய ‘கருப்பராயர்’ குறுநாவலை கரு. பாலா அறிமுகம் செய்தார். எழுத்தாளர் புன்னகை பூ ஜெயக்குமார் ஏற்புரையாற்றினார்.</p><p>இந்த இலக்கிய விழாவில் தமுஎகச மாவட்டத் தலைவர் மு.காளிநாதன், இலக்கிய சந்திப்பு ஒருங்கிணைப்பாளர் தங்க முருகேசன் மற்றும் படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்துகொண்டனர். நிறைவாக மாவட்டக் குழு உறுப்பினர் காயத்ரி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram