முந்தய பக்கம்

குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

2 Nov 2026, 11:26 pm
குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிரந்தர பணியாளர்களுக்கு 25 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸ் வழங்க வேண்டும். பிஎப் உள்ளிட்ட பலன்களை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செய்யாறு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் நிர்வாகி ராமநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் கந்தன், சிஐடியு நிர்வாகிகள் வெ. சங்கர், டி.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். முருகையன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram