திருவள்ளூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளை கைப்பற்றிய தவெக
6 May 2026, 1:38 am

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளை கைப்பற்றிய தவெக

திருவள்ளூர், மே 5- சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப் 23 அன்று நடை பெற்றது.

இதனை தொடர்ந்து மே 4 அன்று திருவள்ளூர் அரு கில் உள்ள செவ்வாய்பேட்டை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, பெரு மாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஸ்ரீராம் வித்தியா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

திரு வள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

துவக்கத்திலிருந்தே தவெக முன்னிலை வகித்து வந்த நிலையில் 9 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருத்தணி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

கும்மிடிப்பூண்டி தவெக வெற்றி கும்மிடிப்பூண்டி, தொகுதி விஜய குமார் (தவெக) 94320 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சுதாகர் (அதிமுக), 66375 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். டி.ஜெ.கோவிந்தராஜன் (திமுக), 62492 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார் பெற்றார். ஸ்ரீதர் (நாதக), 4756 வாக்குகள் பெற்றார். பொன்னேரி தவெக வெற்றி பொன்னேரி (தனி) தொகுதி எம்.எஸ்.ரவி (தவெக), 110439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துரை.சந்திரசேகர் (காங்), 54671 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். பலராமன் (அதிமுக), 51468 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில், ராஜாத்தி (நாதக), 6676 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார். திருத்தணி அதிமுக வெற்றி திருத்தணி கோ.அரி (அதிமுக), 89169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சத்தியகுமார் (தவெக), 83376 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக), 54863 வாக்குகள் பெற்று மூன்றாவதாக வந்தார்.

சந்திரன் (நாதக), 6704 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர்.

திருவள்ளூர் தவெக வெற்றி திருவள்ளூர் தொகுதியில் அருண்குமார் (தவெக), 92190 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார்.

வி.ஜி.ராஜேந்திரன் (திமுக), 67430 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், பி.வி.ரமணா (அதிமுக), 56562 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

செந்தில் குமார் (நாதக), 5513 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பூந்தமல்லி தவெக வெற்றி பூந்தமல்லி தொகுதியில் பிரகாசம் (தவெக), 1.61,309 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிருஷ்ணசாமி (திமுக), 88569 வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தார்.

ஏழுமலை (அமமுக), 43280 வாக்குகள் பெற்று மூன்றாவதாக வந்தார். மேகலா (நாதக), 11697 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

ஆவடி தவெக வெற்றி ஆவடி தொகுதியில் ரமேஷ்குமார் (தவெக), 1,80,384 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அமைச்சர் நாசர் (திமுக), 1,04,073 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ராஜசிம்ம மகேந்திரா (பாஜக), 39605 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

புனிதா சண்முகம் (நாதக), 16335 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். மதுரவாயல் தவெக வெற்றி மதுரவாயல் தொகுதியில் ரேவந்த் சரண் (தவெக), 1,41,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கணபதி (திமுக), 80216 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பெஞ்சமின் (அதிமுக), 54705 வாக்குகளும், ரேவதி (நாதக), 13024 வாக்குகள் பெற்று தோல்வியுற்றனர்.

அம்பத்தூர் தவெக வெற்றி அம்பத்தூர் தொகுதியில் பாலமுருகன் (தவெக), 1,32,995 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

டாக்டர் பூர்ணிமா (திமுக), 74156 வாக்குகளும், கே.என்.சேகர் (பாமாக), 35826 வாக்குகளும், சிலம்பரசன் (நாதக), 11049 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தனர்.

மாதவரம் தவெக வெற்றி மாதவரம் தொகுதியில் விஜய்பிரபு (தவெக), 1,90,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சுதர்சனம் (திமுக), 95477 வாக்குகளும், மூர்த்தி (அதிமுக), 59290 வாக்குகளும், கிருத்திகா (நாதக), 12637 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

திருவொற்றியூர் தவெக வெற்றி திருவொற்றியூர் தொகுதியில் செந்தில்குமார் (தவெக), 1,10,067 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சுந்தர்ராஜ் (சிபிஎம்), 56503 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். குப்பன் (அதிமுக), 28320 வாக்குகளும், சத்யா (நாதக), 8413 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தனர். தவெகவின் இந்த வெற்றியை தொண்டர்கள், கொண்டாடி வரு கின்றனர்.

தென்சென்னை புறநகர் ஆலந்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ஹரீஷ் 29 ஆயிரத்து 600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஹரீஷ் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 205, தா.மோ.அன்பரசன் (திமுக) 82 ஆயிரத்து 596, சரவணன் (அதிமுக) 52 ஆயிரத்து 243, மகாலட்சுமி (நாதக) 10 ஆயிரத்து 405 வாக்குகளை பெற்றனர்.

சோழிங்நல்லூர் தொகுதியில் தவெக வேட்பாளர் பி.சரவணன் 96 ஆயிரத்து 780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சரவணன் 2 லட்சத்து 20 ஆயிரத்து 382, அரவிந்த் ரமேஷ் (திமுக) ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 602 வாக்குகள், கே.பி.கந்தன் (அதிமுக) 74 ஆயிரத்து 122, ஜெயலட்சுமி ராமன் (நாதக) 21 ஆயிரத்து 919 வாக்குகள் பெற்றனர். பல்லாவரம் தொகுதியில் தவெக வேட்பாளர் காமாட்சி 54 ஆயிரத்து 498 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமாட்சி ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 250, அனகை முருகேசன் (தேமுதிக) 78 ஆயிரத்து 752, வெங்கடேசன் (ஐஜேகே) 48 ஆயிரத்து 802, கார்த்திகேயன் (நாதக) 14 ஆயிரத்து 14 வாக்குகள் பெற்றனர்.

தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் 35 ஆயிரத்து 621 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சரத்குமார் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 967, கிருத்திகாதேவி (திமுக) 83 ஆயிரத்து 346, ச.ராஜேந்திரன் (அதிமுக) 61,991, தமிழ்ச்செல்வி (நாதக) 11 ஆயிரத்து 627 வாக்குகள் பெற்றனர்.