சென்னை விரைவு செய்திகள்
7 May 2026, 2:32 am

சென்னையிலேயே தங்கியிருங்கள் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் உத்தரவு!

சென்னை, மே 6- தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அனைவரும், பதவியேற்பு விழா முடியும் வரை பாதுகாப்பாகச் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பனையூரில் செவ்வாயன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தவெக எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த விஜய், தொகுதி நில வரங்கள் குறித்துக் கேட்டறிந்ததாகக் குறிப்பிட்டனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அடுத்தகட்ட அரசி யல் நடவடிக்கைகளுக்காகவும் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என அறி வுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, வெளியூர்களில் இருந்து வந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் தங்குவதற்காகச் சென்னை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, தவெக தலைவர் விஜய் தனது முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, நிர்மல்குமார் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோருடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சரவை உருவாக்கம் குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சர வையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மகன் கொலை: நாடகமாடிய தாய் கைது

சென்னை, மே 6- சென்னை வியாசர்பாடியில் 6 வயது சிறுவன் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், உண்மையை மறைத்து நாடகமாடிய அவரது தாயை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பள்ளத் தெருவைச் சேர்ந்த சிவரஞ்சனி, தனது கணவரைப் பிரிந்து வீரசெல்வன் என்பவருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிவரஞ்சனி தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை மூத்த மகன் கிருஷ்ணன் (6) மயங்கிய நிலையில் இருப்பதாகக் கூறி, ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது 9 மாத தம்பியுடன் கயிற்றால் விளை யாடிக்கொண்டிருந்தபோது, சிவரஞ்சனி அவனைக் கண்டித்துள்ளார். அப்போது மிரட்டுவதற்காகத் துப்பட்டாவால் கிருஷ்ண னின் கழுத்தை இறுக்கியதில் அவன் மயக்கமடைந்துள்ளார். பயந்துபோன சிவரஞ்சனி, மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அப்படியே தூங்க வைத்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் சிறுவன் மூச்சுத்திணறலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, சிவரஞ்சனி மீது கொலை வழக்குப் பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பர்னிச்சர் வணிகத்தில் 2029-ஆம் ஆண்டிற்குள் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு

சென்னை, மே 6- கோத்ரேஜ் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பர்னிச்சர் பிராண்டான கோத்ரேஜ்’ ‘இன்டீரியோ, வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் 10,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2027 மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் தனது வருவாயை 25 சதவீதம் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2026-ஆம் நிதியாண்டிலும் இதேபோன்ற 25 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்நிறுவனம், 4,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் 55 சதவீதம் அலுவலகங்களுக்கான உட்புற வடிவமைப்புப் பணிகளில் இருந்தும், மீதமுள்ள 45 சதவீதம் நுகர்வோருக்கான நேரடி பர்னிச்சர் விற்பனை மூலமும் கிடைக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நுகர்வோர் வர்த்தகப் பிரிவுத் தலைவர் தேவ் நாராயண் சர்க்கார், கூறினார். இந்தியாவின் ஒட்டுமொத்த பர்னிச்சர் சந்தை 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், அதில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் பங்கு வெறும் 8,000 கோடி ரூபாய் மட்டுமே என்பதால், தங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு வளர இன்னும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார். உற்பத்தியைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஏழு அலகுகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், சென்னை தாம்பரம் அருகே ஏற்றுமதிக்கெனத் தனிப் பிரிவை இயக்கி வருகிறது. உலகளாவிய அரசியல் சூழலால் பாலிஎதிலீன் ரெசின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதால், மூலப்பொருள் செலவு சற்று அதிகரித்திருப்பினும் உற்பத்தியில் பெரிய பாதிப்பு இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை, மே 6- சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் என்பவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, காசிமேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுமியை, தினேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லவே, மே 3-ம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷை செவ்வாயன்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான தினேஷ், ஆர்.கே.நகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ மரிய வில்சனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்தங்கள் தொடக்கம்

சென்னை, மே 6- சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகளின் வசதிக்காக 2025-26 நிதியாண்டில் 20 புதிய வாகன நிறுத்தங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னை கோட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 106-லிருந்து 126 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 820.32 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய அடுக்குமாடி வாகன நிறுத்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர வண்டலூர், பொத்தேரி, கிண்டி, அரக்கோணம், பரங்கி மலை மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட 20 முக்கிய இடங்க ளில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் ஆகிய நிலையங்களில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வாகன நிறுத்தங்களில் டிஜிட்டல் டிக்கெட் முறை, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைப்பதோடு, பயணிகளின் வாக னங்களுக்குப் பாதுகாப்பான இடவசதியை உறுதி செய்யும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

விரைவில் மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் தொடக்கம்

சென்னை, மே 6- தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசு, சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் வழித்தடத்தைத் தொடங்கி வைப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்திய தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி யுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ள சூழலில், 118.9 கி.மீ நீள இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி - வடபழனி வழித்தடம் இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வர வுள்ளது. இதில் பூந்த மல்லி முதல் போரூர் வரை யிலான பகுதிக்கு ஏற்க னவே இறுதி அனுமதி கிடைத்துள்ள நிலையில், போரூர் முதல் வடபழனி வரையிலான பகுதியில் பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்திய பணிகளை மெட்ரோ நிர்வாகம் நிறைவு செய்துள்ளது. இதனைத் தொட ர்ந்து அடுத்த வாரம் நடை பெறவுள்ள இறுதி ஆய்வுக்குப் பிறகு முழுமை யான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரயில்களின் வேகத்தை 25 கி.மீ-லிருந்து 40 கி.மீ ஆக உயர்த்தவும், ரயில்களின் இடைவெளியைப் பத்து நிமிடமாகக் குறைக்கவும் மெட்ரோ நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. புதிய ஆட்சி அமைந்ததும் இந்த வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.

கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

சென்னை, மே 6- சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1.7 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பாங்காங்கிலிருந்து வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில், அழகு சாதனப் பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டி ருந்த 868 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மே 4-ம் தேதி மற்றொரு பயணி யிடம் உணவுப் பொட்ட லங்களுக்குள் மறைக்கப் பட்டிருந்த 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.