தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆளுநர் மாளிகை ஆட்டக்களம் அல்ல!

7 May 2026, 8:50 pm
ஆளுநர் மாளிகை ஆட்டக்களம் அல்ல!

ஆளுநர் மாளிகை ஆட்டக்களம் அல்ல!

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப் பேர வைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் தமிழக வெற்றிக்கழ கம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆளுநரைச் சந்தித்து இந்தக் கட்சி மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இந்தக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோசப் விஜய் ஆளுநரைச் சந்தித்து தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரியுள்ளார்.

வேறு எந்தக் கட்சியும் தங்களுக்கு பெரும் பான்மை இருப்பதாகவும், ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென்றும் இதுவரை உரிமை கோரவில்லை. இந்த நிலையில், தவெகவை ஆட்சியமைக்க அனுமதிப்பது ஒன்றே ஆளுந ரின் அரசியல் சட்டப்பூர்வ கடமையாக இருக்க முடியும் ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்க ளின் ஆதரவு இருப்பதை ஜோசப் விஜய் உறுதி செய்யுமாறு ஆளுநர் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சியமைக்கும் ஒரு கட்சி பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப் பேரவையே அன்றி ஆளுநர் மாளிகை அல்ல. ஆனால் அரசியல் சட்ட நெறிமுறைக்கு மாறாக வும், உச்சநீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கு மாறாகவும், பெரும்பான்மையை ஆட்சியமைப்பதற்கு முன்பே நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் நிர்ப்பந்திப்பது முறையல்ல.

ஆளுநரின் தாமதப்படுத்தும் நடவடிக்கைக்கு பின்னால் ஒன்றிய பாஜக அரசின் வழிகாட்டுதல் இருக்கலாம் என்பதை நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால் ஒன்றிய ஆட்சியாளர்களால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அவரது பதவிக்காலம் முடிந்தபிறகும் ஆளுநர் பொறுப்பிலேயே பல மாதங்கள் நீடிக்க அனுமதிக்கப்பட்டார். அவர் மேற்குவங்க ஆளு நராக மாற்றப்பட்டப் பிறகு தமிழ்நாட்டினுடைய ஆளுநராக யாரும் நியமிக்கப்படவில்லை.

கேரள மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராக செயல்படுகிறார். ஆனால் அவர் தமது அரசியல் சட்டப் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. ஆளுநரின் தாமதத் தின் பின்னணியில் பாஜகவின் சதி விளையாட்டு உள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் முந்தைய ஆட்சி யின் போது போட்டி அரசாங்கத்தையே நடத்தி வந்தனர். தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந் துள்ள நிலையில், ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு குறுக்குச்சால் ஓட்டுவது அரசியல் சட்டத்திற்கும், கூட்டாட்சி மரபிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.