தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டில் உறுதி காட்ட வேண்டும்!

13 May 2026, 10:07 pm
பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டில் உறுதி காட்ட வேண்டும்!

பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டில் உறுதி காட்ட வேண்டும்!

சென்னை, மே 13 - தவெக தலைவர் விஜய்க்கு, கடந்த மே 10 அன்று முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் அர்லேகர், புதிய அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேர வையில் மே 13-ஆம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி, தவெக அரசு புதன்கிழமை யன்று காலை 9.30 மணியளவில் சட்டப்பேர வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது.

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

அவற்றின் சுருக்கம் வருமாறு: ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை அனுமதிக்க மாட்டோம்

. பாஜக தமிழகத்தினுள் நுழைவதை தடுப்பதற்காகவும், மதச்சார்பற்ற ஆட்சிக்காகவும் தவெக அரசுக்கு ஆதரவு தருகிறோம். டி. ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தவெக அரசு தங்களது கொள்கை எதிரி பாஜக என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ச

மூகநீதிக் கொள்கைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆளுநர் வழி யாக பாஜக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என் பதால் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

வன்னி அரசு (விடுதலைச் சிறுத்தைகள்) ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுசீர மைப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க) குதிரை பேரம் நடப்பதாக சிலர் கூறியதை மனவேதனையுடன் பதிவு செய்கிறேன்.

முதல்வ ரின் ஜோதிடர் அரசு ஆலோசகராக நியமிக்கப் பட்டதை கடுமையாக எதிர்க்கிறேன்.

இந்த நிய மனத்திற்கு மாநிலமே எதிர்ப்பு தெரிவிக்கிறது.

ஜவாஹிருல்லா (ம.ம.க.) மதவாதத்திற்கு எதிராக தமிழ்நாடு மக்கள் வாக்களித்துள்ளனர்.

வெறுப்புப் பேச்சு மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டது போல் இந்த அரசும் செயல்பட வேண்டும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறி வியல்பூர்வமான அணுகுமுறையை முந்தைய அரசு பின்பற்றியது போல் இளைய தலைமுறை யிடம் மூடநம்பிக்கையை ஒழித்து அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

தமிமுன் அன்சாரி (ம.ஜ.க) முதல்வரின் தனிப்பட்ட நம்பிக்கையை மதிக்கிறேன்.

ஆனால் அதனை அரசுமயமாக்கு வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஜோதி டர் ரத்தன் பண்டிட்டிற்கு அரசுப் பதவி வழங்கி யதை ஏற்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக) அதிமுகவில் 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு தரப்பிற்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பது ஏன்? தூய்மையான ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் கூறினீர்கள், அந்த வாக்கை காப்பாற்ற வேண்டும்

. தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம்.

எதிர்ப்பும் - சலசலப்பும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி பேசி முடித்தவுடன், அதி முகவின் மற்றொரு தலைவரான எஸ்.பி. வேலு மணியும் பேசுவதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிர பாகர் அழைப்பு விடுத்தார்.

அப்போது, கட்சியின் தலைவர் பேசி முடித்தபின், அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவரை பேசுமாறு கூற முடி யாது என்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் எதிர்ப்பு தெரி வித்தனர்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஒரு உறுப்பினரை பேசுவதற்கு அனு மதி அளிக்க தனக்கு உரிமை உள்ளது, எனது முடிவே இறுதியானது என கூறினார். தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியை பேசுமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறினார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இத னால் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது இருக்கையில் இருந்து எழுந்து அனை வரையும் அமர வைத்தார்.

இந்த சூழலில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.