பனையூர் அலுவலகத்தில் தவெகவில் இணையவந்தவர்களிடையே தள்ளுமுள்ளு
21 Jun 2026, 1:17 am
<p><strong>பனையூர் அலுவலகத்தில் தவெகவில் இணையவந்தவர்களிடையே தள்ளுமுள்ளு</strong></p><p>சென்னை, ஜூன் 20 - சென்னை அருகே பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) பிற கட்சி நிர்வாகிகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதி காலை முதலே ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். காவல்துறையினர் முக்கிய நிர்வாகி களை மட்டும் கண்டறிந்து உள்ளே அனுமதித்தனர். இதனால் அதிருப்திய டைந்த மற்றவர்கள் கதவை தள்ளிக் கொண்டு நுழைய முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் கட்சி நிர்வாகி களுக்கும் இடையே வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான் உட்பட ஏராளமானோர் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னி லையில் த.வெ.க.வில் இணைந்தனர். மேலும், நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தனது கட்சியையே த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.</p>
