முந்தய பக்கம்

தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

16 Jun 2026, 11:14 pm
தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
<p><strong>தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு</strong></p><p>கும்பகோணம், ஜுன் 16- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை தவெகலின் தஞ்சை கிழக்கு மாவட்டப் பொருளாளர் விஜய் சந்திரன் தலைமையேற்று திறந்து வைத்தார். திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பு சரவணன் முன்னிலை வகித்தார். அப்போது, நாச்சியார்கோவில் ஊராட்சி தவெகவை கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்களுக்கு இளநீர், பண நுங்கு, தர்பூசணி, மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுதாகர், சம்பத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினித், திருவிடைமருதூர் ஒன்றிய இணைச் செயலாளர் கோபிநாத் நாச்சியார்கோவில் ஊராட்சிக் கழகச் செயலாளர் வினோத் உள்ளிட்ட வலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram