தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை தூத்துக்குடியில் மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
7 Jun 2026, 11:01 pm

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை தூத்துக்குடியில் மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 7- தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகள் தொடர்ந்து அதி கரித்து வரும் சூழலில், தூத்துக்குடி யில் அரசியல் கட்சி நிர்வாகிகளால் இளம்பெண் ஒருவர் கும்பல் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளைக் கண்டித் தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

வழக்கின் பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு பகுதி துணைச் செயலாள ராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவெக தூத்துக் குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத் தவெக நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கடந்த மே மாதம் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். காரில் செல்லும் போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ஏர்வாடி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி அக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப் பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இரு வரையும் கைது செய்து பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைத்த னர்.

மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத் தலைவர் கிரேஸி பாலம்மாள் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா, மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.சசிகலா, மாநிலச் செயலாளர் பி.பூமயில், மாவட்டச் செயலாளர் த.ஜானகி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாது காப்பு வழங்க வேண்டும், தமிழ கத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

“எம்.எல்.ஏ தரப்பில் கொலை மிரட்டல்” - அ.ராதிகா பேட்டி

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாதர் சங்க பொதுச்செயலாளர் அ.ராதிகா செய்தியாளர்களிடம் கூறு கையில், “பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சர வணனின் வெற்றிக்காகத் தீவிர மாகப் பாடுபட்டவர். தற்போது குற்ற வாளிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டு வரும் எம்.எல்.ஏ சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், புகாரை வாபஸ் வாங்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் டாஸ்மாக் கடைகளும், போதைப் பொருள் புழக்கமும்தான். ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறப்பட்டது, ஆனால் இன்னும் பல இடங்களில் மதுக்கடைகள் திறந்தே இருக்கின் றன. தற்போது கூட திருச்சியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு 7 சிறார் கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு, காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கப் பேட்டி

செய்தியாளர் சந்திப்பில் பாதிக்கப் பட்ட பெண் கூறுகையில், “குற்ற வாளிகள் இருவரும் கேரளாவி லிருந்த எம்.எல்.ஏ சரவணனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்தபோது தான் போலீசார் கைது செய்துள்ள னர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது எம்.எல்.ஏ பெயரைக் குறிப்பிடக் கூடாது எனக் காவல்துறையினர் என்னை மிரட்டி னர். தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்துப் புகார் அளிக்கச் சென்ற போது போலீசார் தடுத்துவிட்டனர். கட்சி நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை; மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். தவெக-விற்காக உழைத்தற்குக் கிடைத்த கூலி இது தான். பாதிக்கப்பட்ட நான் அசிங்கப் பட்டு கேவலப்பட்டு எதில் தொங்க லாம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறேன்” என்று கண்ணீருடன் தெரி வித்தார். மேலும், தன்னுடன் வந்த மற்றொரு பெண்ணுக்கும் இதேபோன்று வன்கொடுமை நடந்துள்ளதாகவும், குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர் புகார் அளிக்க அஞ்சி வருவதாகவும் அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்தார். பேட்டியின் போது மாதர் சங்க நிர்வாகிகள் ஆர்.சசிகலா, பி.பூமயில், ஆர்.இனிதா ஆகியோர் உடனிருந் தனர். இந்த வழக்கு தொடர்பாகப் போலீசார் தொடர்ந்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். (ந.நி)