கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தவெக மாவட்ட நிர்வாகியை கைது செய்யக்கோரி தக்கலையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
27 Oct 2026, 9:10 pm

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தவெக மாவட்ட நிர்வாகியை கைது செய்யக்கோரி தக்கலையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.26-கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை கைது செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் சார்பில் தக்கலையில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவில் பிரபல கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பேருந்துக்காக காத்திருந்த இந்த மாணவி மற்றும் தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்த இவரது தோழியான குமரி மத்திய மாவட்ட தவெக இளைஞர் அணி நிர்வாகியை மருந்துகோட்டையை சேர்ந்தகுமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் வற்புறுத்தி காரில் அழைத்துச்சென்றுள்ளார். முதலில் தவெக பெண் நிர்வாகியை மூலச்சல் பகுதியில் கிறிஸ்டோபர் இறக்கிவிட்டுள்ளார். பின்னர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவரது பெற்றோர் தவெக பெண்நிர்வாகியுடன் குமாரபுரம் (கொற்றிக்கோடு) காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துள்ளனர். அங்கு பணம் கொடுத்து வழக்கை முடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே இந்த வழக்கை தக்கலை காவல்துறையினர் விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்தார். தக்கலை காவல்துறையினர் விசாரணை நடத்தி மாணவியின் புகாரின் பேரில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தவெக நிர்வாகியான கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை கைது செய்யக்கோரி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குலசேகரம் வட்டார செயலாளர் லீனா லைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் உஷா பாசி, குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் டெல்பின், மாதர்சங்க மாவட்ட செயலாளர் ரெகுபதி, அன்புசெல்வி ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கிறிசாந்து மேரி, வாலண்டினா உள்பட பலர் கலந்து கொண்டனர்.