தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெரியாறு அணையில் ட்ரோன் மூலம் படம் பிடித்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்எல்ஏகேரள வனத்துறையினர் விசாரணை

10 Aug 2026, 8:30 pm
பெரியாறு அணையில் ட்ரோன் மூலம் படம் பிடித்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்எல்ஏகேரள வனத்துறையினர் விசாரணை

பெரியாறு அணையில் ட்ரோன் மூலம் படம் பிடித்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்எல்ஏகேரள வனத்துறையினர் விசாரணை

தேனி ,ஆக.10-பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பெரியாறு அணையின் ட்ரோன் பதிவுகளை பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் சமூக வலை தளங்களில் ரீல்ஸ்களாக பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து கேரள வனத்துறை

யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் .

முல்லை பெரியாறு அணை பெரியாறு புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால் வெளியாட்கள் இங்கு எளிதாக செல்ல முடியாது. மேலும் இங்கு வரவும், புகைப்படம் எடுக்கவும் கெடுபிடியானவிதிமுறைகள் உள்ளன.இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போகத்துக்காக இந்த அணையில் இருந்துதண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக தேக்கடி வனப்பகுதியான தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகுபகுதியில் ஏராளமானோர் வந்திருந்தனர். ஆட்சியர் இரா.வைத்திநாதன் தலைமையில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ ஆ.மகாராஜன், கம்பம்,பெரியகுளம் தவெக சட்டமன்றஉறுப்பினர்கள் ஜெகநாத்மிஸ்ரா, சபரிஐங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது எம்எல்ஏ சபரிஐங்கரனின் ஐடி விங்க் சார்பில் ட்ரோன் கேமராபயன்படுத்தப்பட்டது. இதில் நீர் திறப்பு,பூ தூவுதல், கடந்து செல்லும் நீர் உள்ளிட்டவை அதில் படம்பிடிக்கப்பட்டது. மேலும் உயரத்தில் இருந்தபடி கழுகுப்பார்வையில் வனப்பகுதியின் பல காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

பின்பு இந்த காட்சிகள் பின்னணிஇசையுடன் ரீல்ஸ்களாக சபரிஐங்கரனின் சமூகவலைதளங்களில் பதிவேற்றப்பட்டது. இந்த பதிவுகள் பல பகுதிகளிலும் பரவிய நிலையில் கேரள வனத்துறையினரின் கவனத்துக்குகொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தமிழகநீர்வளத்துறையிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் எப்படி இதனை அனுமதிக்கலாம் என்று கூறி விவரம் கேட்டுள்ளனர்.கேரள வனத்துறையினர் தமிழக தவெக எம்எல்ஏ மீதான புகாரை தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.