தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வெட்டே இல்லைங்கிறாங்க... தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பவர் கட் கூத்து

24 Sept 2026, 11:49 pm
மின்வெட்டே இல்லைங்கிறாங்க...  தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பவர் கட் கூத்து

மின்வெட்டே இல்லைங்கிறாங்க... தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பவர் கட் கூத்து

தாராபுரம், செப். 24-தமிழக அரசியல் களம் இடைத்தேர்தல் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாராபுரம் சென்னியப்பா நகர் பகுதியில் வியாழனன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனை கூட்டம், ‘மின்வெட்டு’ சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

இடைத்தேர்தலில் தாராபுரத்தை கைப்பற்றும் முனைப்பில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ், ஜெய் பாலாஜி, பர்வேஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் சமீபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த முன்னாள்அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன் என பெரும் பட்டாளமே அங்கு முகாமிட்டுள்ளது.கூட்டத்தில் செங்கோட்டையன், “தமிழ்நாடு பொன் விளையும் பூமியாக...” என மாநிலத்தின் பெருமையைப் பேசி உரையை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மின்வெட்டு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டு புகார்கள் எழுந்துள்ள சூழலில், ‘மின்வெட்டே இல்லை’ என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து மறுத்து வருவதும், இதனிடையே முதலமைச்சர் விஜய் நேரடியாக மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பரபரப்பான சூழலில், ஐந்து அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற ஆளுங்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திலேயே மின்சாரம் தடைப்பட்டது, கட்சியின்நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொள்ள நிர்வாகிகள் அடுத்தடுத்து முயன்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.கரண்ட் கட்டே இல்லேங்கிறாங்க…ஆனா அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே கரண்ட் இல்லாம போச்சு என அப்பகுதியினர் பேசியது சிரிப்பலையைஉருவாக்கியது.

நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்த அமைக்கப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டம், இறுதியில் மின்வாரியத்தின் குளறுபடியால் அரசியல் விமர்சகர்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் ‘விமர்சனப் பொருளாக’ மாறிப் போனது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.