அனுமதியின்றி சோத்துப்பாறை அணையை திறந்த தவெகவினர் மீது காவல்துறையில் புகார்!
yesterday

அரசு அனுமதியின்றி சோத்துப்பாறை அணையை திறந்த தவெகவினர் மீது காவல்துறையில் பொதுப் பணித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை, பெரியகுளம் நகரின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும், 2,900 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களின் நீர்ப்பாசன ஆதாரமாகவும் உள்ளது.

அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கமாக அரசு உத்தரவின்படியே நடைபெறும். இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் சூழலில், நேற்று அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் தவெக நிர்வாகிகள் சிலர், 1,000 ஏக்கர் விவசாயப் பாசனத்திற்காக ஆயக்கட்டுப் புதுவாய்க்காலில் தண்ணீரைத் திறந்துவிட்டனர்.

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தவெக தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள், அரசு அனுமதியின்றித் திறந்துவிட்டு, அதனைச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி அணையை திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுப் பணித்துறையினர் காவல்துறையில் புகார்; இதனடிப்படையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோவை கைப்பற்றிப் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.