தவெக-வினர் மீது லஞ்சப் புகார் அளித்த செங்கல் சூளை உரிமையாளர் மீதும் வழக்கு
28 May 2026, 9:47 pm

தவெக-வினர் மீது லஞ்சப் புகார் அளித்த செங்கல் சூளை உரிமையாளர் மீதும் வழக்கு

வேலூர், மே 28 - பணம் கேட்டு மிரட்டியதாக தவெக முன்னாள் நிர்வாகி மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், கண்ணி யம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் சில செங்கல் சூளை உரிமை யாளர்களிடம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் வழங்க வேண்டும் என தவெக-வின் கண்ணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் (குற்றச்சாட்டை அடுத்து, தற்போது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சிலர் இணைந்து கண்ணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த னர்.

ஆனால் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆகையால், போலீசாரின் இந்த செயலைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை (மே 25) அன்று கண்ணியம்பாடி பேருந்து நிலையம் அருகே செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்ட க்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோட்டாட்சியர் தலைமை யில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.

இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் செந்தில்குமார், இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

ஆனால், அதன் பின்னரும் நடவடிக்கை எதுவும் இல்லாததால், காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் அறிவித்தனர்.

மறுபுறத்தில், தவெக நிர்வாகி விஜயகுமாருக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனிடையே, செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம், அளித்த புகாரின் பேரில் விஜயகுமார், லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் சண்முகம், ரமேஷ், சுனில் ஆகியோர் மீதும் வழிமறித்து மிரட்டியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.