முந்தய பக்கம்

போக்ஸோ வழக்கில் சிக்கிய தவெக வழக்கறிஞர்: கட்சியிலிருந்து நீக்கம்

15 Jul 2026, 1:24 am
போக்ஸோ வழக்கில் சிக்கிய  தவெக வழக்கறிஞர்: கட்சியிலிருந்து நீக்கம்
<p><strong>போக்ஸோ வழக்கில் சிக்கிய தவெக வழக்கறிஞர்: கட்சியிலிருந்து நீக்கம் </strong></p><p>கடலூர், ஜூலை 14 – கடலூரில் சிறுவன் துன்புறுத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் தொடர்புடைய தவெக நிர்வாகி சிவகுருவை, கட்சியின் அடிப்படை உறுப்பி னர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடி யாக நீக்கி கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தாயுடன் வசித்து வந்த சிறுவன் துன்புறுத்தப்பட்டதாக, அவனது தந்தை அளித்த புகாரின் பேரில், சிறுவனின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பரான சிவகுரு மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகுரு, கடலூர் கிழக்கு மாவட்ட தவெக வழக்கறிஞர் அணிப் பொறுப்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரான ப.ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram