நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி ஆதரவு - 144, எதிர்ப்பு - 22, நடுநிலை - 5, திமுக வெளிநடப்பு
13 May 2026, 8:51 pm

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி ஆதரவு - 144, எதிர்ப்பு - 22, நடுநிலை - 5, திமுக வெளிநடப்பு

சென்னை, மே 13 - சி. ஜோசப் விஜய் தலைமை யிலான தவெக அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பி னர்களும், எதிராக 22 உறுப்பினர் களும் வாக்களித்தனர். 5 உறுப்பி னர்கள் நடுநிலை வகித்தனர். முன்னதாக திமுக உறுப்பினர்கள், வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெளி நடப்பு செய்தனர்.

தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் விஜய்

முன்னதாக, தமிழ்நாடு சட்டப் பேரவை புதன்கிழமை (மே 13) காலை 9.30 மணிக்கு கூடி யதும், நம்பிக்கை கோரும் தீர்மா னத்தை முதலமைச்சர் விஜய் முன் மொழிந்தார். தொடர்ந்து தீர்மா னம் மீதான விவாதம் நடைபெற்ற பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை யில், திருச்சி கிழக்குத் தொகுதி காலியாக இருப்பதால் மொத்த எண்ணிக்கை 233 ஆக இருந்தது. திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக உறுப்பினர் வாக்க ளிப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்ததால் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.களின் ஆதரவு தேவையிருந்தது.

டிவிசன் வாக்கெடுப்பு

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பானது, எண்ணிக் கணிக்கும் முறையில் (டிவிஷன்) நடைபெற்றது. முன்னதாக பேர வையில் மூன்று முறை மணியோ சை எழுப்பப்பட்டு அனைத்து கதவு களும் சாத்தப்பட்டன. பேரவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவாக ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என சபாநா யகர் வாக்கெடுப்பை நடத்தினார். இதில், தமிழக வெற்றிக் கழ கத்தின் 105 உறுப்பினர்கள், அதி முகவின் (வேலுமணி பிரிவு) 25 உறுப்பினர்கள், காங்கிரசின் 5 உறுப் பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலா 2 உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐ.யு.எம்.எல். கட்சிகளின் தலா 2 உறுப்பினர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் ஒரு உறுப்பினர் என மொத்தம் 144 சட்டமன்ற உறுப்பி னர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

திமுக உறுப்பினர்கள் உட்பட 60 பேர் வெளிநடப்பு

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ. க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்த னர். பாமக 4 உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் 1 உறுப்பினர் என 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். மொத்தம் 171 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். திமுக மற்றும் தேமுதிக கட்சி களைச் சேர்ந்த மொத்தம் 60 சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வாக்கெடுப்பில் வெற்றி

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ள தாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், நம்பிக்கை வாக்கெடு ப்பில் தவெக அரசு வெற்றிபெற்ற நிலையில், தமிழக சட்டப்பேரவை யை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

‘இது மதச்சார்பற்ற அரசு தான்’ முதலமைச்சர் விஜய் உறுதி

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தும், அதன் மீதான விவாதங்களுக்கு பதிலளித்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது, “நிச்சயமாக இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகவே தொடரும் என உறுதியளிக்கிறேன். வாக்களிக்காத மக்களுக்கா கவும் இந்த அரசு செயல்படும். முந்தைய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்கள் தொடரும். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடாது” என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தமது அரசு வெற்றி பெற்ற பின், நன்றி தெரிவித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “இது சிறுபான்மை அரசு தான்; இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கான பாது காப்பை உண்மையாக நிலைநாட்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அமைந்தது தான் இந்த அரசு. எனவே, சமூக நீதி, சமநீதி, சமவாய்ப்பு, மதச்சார்பற்ற கொள்கை ஆகியவற்றில் சிறிதும் மாற்றம் இல்லை” என்று உறுதியளித்தார்.

மக்களுக்கு நல்லதெனில் வரவேற்போம்; பாதகம் எனில் எதிர்ப்போம்! பாதகம் எனில் எதிர்ப்போம்!

சென்னை, மே 13 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் ஆர். செல்லசுவாமி உரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது

: “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி தவெகவை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மதவெறி மூலம் மக்களைப் பிளவுபடுத்தி வன்முறை நடவடிக்கைகள் மூலம் அரசியல் ஆதாயம் தேடி வரும் பாஜகவை இந்த தேர்தலில் தமிழக மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவை பதவியேற்க அழைக்க வேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் தமிழ்நாடு ஆளுநர் மறைமுகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை திணிப்பதற்கான சதி திட்டத்தை நிறை வேற்றும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன.

தமிழக மக்களின் தீர்ப்பிற்கு மாறாக குடியர சுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் ஆபத்தி லிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் நோக்கோ டும், தவெக தலைவர், மக்கள் நலன் மற்றும் மாநி லத்தின் வளர்ச்சி என்ற குறிக்கோளோடு நிலை யான ஆட்சியை அமைக்க தனக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில் இந்த அரசு மக்கள் நலன்களுக்கான திட்டங்களை அறிவிக்கும்போது அதனை வரவேற்கும். அதே சமயம் மக்களுக்கு பாதகம் அளிக்கும் என்றால் அதனை எதிர்த்து குரல் கொடுக்கும். அதேபோன்று, தமிழகத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய வரி வருவாயில் உரிய பங்கு கிடைப்பதிலும், பேரிடர் நிவாரணம் மற்றும் கல்விக்கான நிதி உள்ளிட்டவைகளை பாரபட்சமின்றி கேட்டு பெறுவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்கும்.

தவெக அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சி, சமூகநீதிக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவும், தமிழக சட்டமன்றம் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் மரபுகளையும் மாண்புகளையும் உயர்த்திப் பிடிக்கவும், ஏழை - எளிய உழைப்பாளி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையிலும் திறம்பட செயல்பட வேண்டும். இவ்வாறு ஆர். செல்லசுவாமி கூறினார்.