தணி(னி)யாத தாகம்
2 Oct 2026, 8:50 pm

தணி(னி)யாத தாகம்

சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தந்துவிடுமாறு தமிழ்நாடு முதல்வர் ஜோசப்விஜய் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஆனால் அடுத்தடுத்து தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் மாநில அரசுத் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பது, வெளியாகும் விமர்சனங்களை மாநில தவெக அரசு கருத்தில் கொள்கிறதா என்கிற கேள்வியைஎழுப்புகிறது.

மதுரை, நாகர்கோவில் மாநகராட்சி பாதாளச்சாக்கடை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம்ஒப்படைக்கப் போவதாகவும், இதைத்தொடர்ந்துஅனைத்து மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பாதாளச்சாக்கடை பராமரிப்புப் பணியும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் கோவை மாநகர குடிநீர் விநியோகம் பன்னாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதுதவெக ஆட்சி அமைந்தபிறகு சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ்நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாதமாதம் மின் கணக்கீடு நடைபெறும் என்றுதவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மின்கணக்கீட்டு பணியை ஒப்பந்த முறைக்கு மாற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், இது சோதனை முயற்சிதான் என்று பதிலளிக்கப்படுகிறது.

போதுமான பணியாளர்கள் இல்லாததால்தான் இந்தப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதாக பொருத்தமற்ற காரணம் கூறப்படுகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு பதிலாகஅனைத்தையும் தனியாருக்கு என்று சொல்லி தாரை வார்ப்பது இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கனவில் வெந்நீர்ஊற்றுவது மட்டுமின்றி, மாநிலத்தின் தூய்மைப்பணிக் கட்டமைப்பையே தகர்க்கும் செயலாகும்.

தனியார்மயக் கொள்கையில் அதிமுக, திமுகமற்றும் தற்போதைய தவெக ஆகிய கட்சிகளின் அணுகுமுறை ஒரேமாதிரி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசியமுதல்வர் ஜோசப் விஜய் ஒரு கட்சி இன்னொரு கட்சி சொல்வதை கட் அண்ட் பேஸ்ட் செய்வதாக கூறியிருந்தார்.உண்மையில் ஒன்றிய பாஜக அரசின் தனியார்மயத் திட்டங்களை தமிழக தவெக அரசு வெட்டிஒட்டி நடைமுறைப்படுத்துவது கடுமையாக ஆட்சேபிக்கத்தக்கதாகும்.

மதுரையில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ‘அவர்லேண்ட்’ எனும் தனியார் நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களை வஞ்சிப்பது மட்டுமின்றி, மாநகராட்சியையும் மக்களையும் ஏமாற்றும் வகையில் பல்வேறு தில்லுமுல்லு, திருகுதாள வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெக அரசு தனியார்மய மோகத்தை கைவிடவில்லை என்றால் ‘மாற்றம்’ பெரும் ஏமாற்றமாகவே முடியும்.