தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

12 May 2026, 11:39 pm
சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

சென்னை, மே 12 - சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, சட்டப்பேரவையில் புதன்கிழமையன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏ-க்கள் தேவை என்ற நிலை யில், காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலைச் சிறுத்தைகள்(2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆத ரவு அளித்தன. இதனால், 120 உறு ப்பினர்கள் என்ற பெரும்பான்மையை ஏற்று, தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் அர்லேகர், புதிய அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மே 13-ஆம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி, தவெக அரசு புதன்கிழமையன்று காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. தவெக அரசுக்கு, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏ-க்கள் 30 பேர் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ள திருப்பத்தூர் எம்எல்ஏவுக்குத் தடை

இதனிடையே, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், அஞ்சல் வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத தை எதிர்த்து, திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில், தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, மே 13 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைபெற உள்ள நம்பி க்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு கொறடா சபரிநாதன்

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் பனையூரில் உள்ள கட்சி

அலுவலகத்தில் தவெக எம்.எல்.ஏ.க்கள்

கூட்டத்தை முதலமைச்சர் நடத்தி

னார். அதைத்தொடர்ந்து, அரசு கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.