தவெக அரசு 100 நாள் சாதனை மலர்; காலப்பேழை நூல் வெளியீடு!
18 Aug 2026, 8:27 pm

தவெக அரசு 100 நாள் சாதனை மலர்; காலப்பேழை நூல் வெளியீடு!

சென்னை, ஆக. 18 -தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆட்சி பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவடைந்த வேளையில், அந்த பயணத்தை வரலாற்றுப் பதிவாக மாற்றும் முயற்சியில் தலைமைச் செயலகம் சாட்சியாக அமைந்தது. முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆட்சி குறித்துச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ தயாரித்த “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்”மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” எனும் காலப் பேழை நூல் ஆகிய இரண்டையும் அவர் வெளியிட்டார்.

எண்களிலும் அறிக்கைகளிலும் மட்டும் அடங்காத ஒரு ஆட்சியின்இதயத்துடிப்பை, புகைப்படங்களி லும் உரைத் தொகுப்புகளிலும் பதிவு செய்யும் முயற்சியாக இந்நூல்கள்உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026, மே 10 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ச. ஜோசப்விஜய், மாற்றம் தேடிய மக்களுக் காகச் சிறப்பான மக்களாட்சியை வழங்கும் நோக்கத்துடன் பணியாற்றிவருவதாக அரசு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் பாராட்டு

நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், ஆகஸ்ட் 17 திங்களன்று காலை 9.30 மணிக்குச் சட்டப்பேர வை கூடியதும், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவு செய்த தற்கான உரையுடன் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அவையைத் தொடங்கினார்.

“அரசின் இந்த முதல் 100 நாட்கள் நாட்காட்டியில் கடந்து செல்லும் நாட்கள் அல்ல, தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று மாற்றம்” என்று அவர் வர்ணித்தார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் விளம்பர

வெளிச்சத்தைத் தேடாமல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களில் முதலமைச்சர் கையெழுத்திட்டதாக அவர் பாராட்டி உரையாற்றினார்.

சாதனை மலரும் காலப்பேழை நூலும்

இச்சாதனை மலரானது, இவ்வரசு பொறுப்பேற்ற நூறு நாட்களில்நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், துறைகளின் சாதனைகள், முதலமைச்சர் மேற்கொண்ட கள ஆய்வுப்பணிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் உரைத்தொகுப்புகளைப் புகைப்படங்களு டன் இணைத்துத் தயாரிக்கப் பட்டுள்ளது. “ஒரு புதிய தொடக்கம்” எனும்காலப்பேழை நூலோ, முதலமைச்சர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களையும், அரசு மேற்கொண்டமக்கள் நலத் திட்டங்களையும் ஒரு காலவரிசை யாக வடிவமைத்துள்ளது.

முக்கியத் திட்டங்கள்

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த முதலமைச்சர் விஜய், இந்த 100 நாட்களில் நிறை வேற்றப்பட்ட முக்கியத் திட்டங்களின் தொகுப்பாக இந்த மலர் அமைந்துள் ளது என்றார்.

200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கான சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் ஒழிப்புக்கான 65 தனிப்படைகள் அமைக்கப்பட்ட விவரங்கள் இதில் விரிவாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. விவசாயிகளின் கூட்டு றவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி, கல்வி மற்றும்மருத்துவத்துறையில் கட்டமைப்பு மேம்பாடுகள், மற்றும் 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதுபோன்ற தவெக அரசின் முக்கிய மைல்கல் முடிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள் ளன.

எக்ஸ் தளப் பதிவு

நூல் வெளியீட்டுடன் நின்றுவிடா மல், “ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற தலைப்பில் முதல்வர் விஜய் தனது ஆட்சியின் சிறப்புத் திட்டங்களைப் பட்டியலிட்டு எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் ‘அண்ணனின் சீர்’ திருமண நிதியுதவி (ரூ.812 கோடி), தாய்மார்களுக்குத் தங்க மோதிரம் (ரூ.560 கோடி), விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி (ரூ.6,000 கோடி), ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம் (ரூ.2,000 கோடி), மற்றும் 717

மதுபான கடைகள் மூடல் உள்ளிட்ட வை இடம்பெற்றுள்ளன.

கடந்த 100 நாட்களில் மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய், வரும் நாட் களிலும் அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனஉறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், செய லாளர்வே. ராஜாராமன், இயக்குநர் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.