முந்தய பக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

7 May 2026, 10:23 pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை  தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சிறுமிக்கு பாலியல் தொல்லை தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை, மே 7-

சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் என்பவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, காசிமேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுமியை, தினேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லவே, மே 3-ம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷை செவ்வாயன்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான தினேஷ், ஆர்.கே.நகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ மரிய வில்சனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram