தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

9 May 2026, 12:30 am
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தவெகவுக்கு சிபிஐ வெளியில் இருந்து ஆதரவு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து தவெக கூட்டணியின் மொத்த பலம் 114 ஆக உயர்ந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 8) சென்னை தியாகராய நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அலுவலகத் திற்கு வருகை தந்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆதரவுக் கடிதத்தை அவரிடம் வழங்கினர். சட்டமன்றக் குழுத் தலைவராக தளி ராமச்சந்தி ரன் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநருக்கு வழங்கப்படவுள்ள ஆதரவுக் கடிதத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி மற்றும் தளி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந் தது. தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற தலைவர் விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியிருப்பதால் கட்சியின் நேரடி பலம் 107 ஆகும். காங்கிரஸ் 5 உறுப்பினர் களின் ஆதரவுடன் 112 ஆக உயர்ந்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்கள் இணைந் ததால் தற்போது மொத்த பலம் 114 ஆகியுள்ளது.

புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய சட்ட மன்ற உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நிலையில், பழைய சட்ட மன்றத்தையும் ஆளுநர் கலைத்துவிட்டார். இந்த சூழலில் புதிய ஆட்சி அமைவதில் தாமதம் நிகழ்வது ஜனநாயக மரபிற்கு முற்றிலும் எதிரானது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி. எனவே, அரசியல் சட்டப்படி புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக் கைகளை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் அவசியம் ஆளுநர் அர்லேகர் பேட்டி

சென்னை: தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை யில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரி யிருப்பது குறித்து, பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், “தனிப்பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டுமான பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டுக்கே உரிய பிரச்சனை. 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. சிறுபான்மை அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை நான் அனு மதிக்க முடியாது. 118 சட்டமன்ற உறுப்பினர்களை என் கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை. விஜய் பதவியேற்பை நான் தடுப்பதாக எப்படிச் சொல்ல முடியும்? விஜய் பெரும்பான்மை எண்ணிக்கையுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க முழுமையாக தயார்” என்று தெரிவித் தார்.

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தேதி மாற்றம்

சென்னை: மதிமுக நிர்வா கக் குழு கூட்டம் தேதி மாற்றப் பட்டுள்ளதாக கட்சி பொதுச் செயலாளர் வைகோ அறிவித் துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப் பில், “மே 16 ஆம் தேதி நடை பெற திட்டமிடப்பட்டிருந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டம், இப்போது மே 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெ றும். கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித் துள்ளார். தமிழக அரசி யலில் நிலவும் அசாதாரண சூழலையடுத்து கட்சியின் அடுத்தக்கட்ட நிலைப்பாட்டை தீர்மானிக்கவே இந்தக் கூட்டம் முன்னதாகவே கூட்டப்படு கிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மாளிகை முன் தவெக தொண்டர்கள் போராட்டம்-கைது

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதி களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததைக் கண்டித்து, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முன்பாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மே 8 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிக் கொடிகளுடனும் ஒன்றிய அரசுக்கும், ஆளுநருக் கும் எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடனும் தொண்டர்கள் குழுமினர். பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கும் நிலையில் ஆளுநர் தாமதிப்பது ஜனநாய கத்திற்கு விரோதமானது என அவர்கள் கூக்குரலிட்டனர். தடையை மீறி முன்னேற முயன்ற தொண்டர்களை பாது காப்பு போலீசார் கைது செய்தனர். தவெக ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் மாநிலம் முழுவதும் போராட்டங் களில் ஈடுபட்டது. கும்பகோணம் உள்ளிட்ட சில இடங்களில் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை உட்பட முக்கிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உளவுத் துறையும் சமூக வலைதளங்களில் விடப்படும் போராட்ட அழைப்புகளை கடுமையாக கண்காணித்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.