தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

29 Jun 2026, 12:29 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கொலைவெறி தாக்குதல்: வழக்குப்பதிவு

அவிநாசி, ஜூன் 28- உட்கட்சிப் பூசலில், நிர்வாகியை தாக்கிய தவெகவினர் மீது அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி, முத்துச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவர் தவெக திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க செயற்குழு உறுப்பினராக இருந்து வரு கிறார். இவர், ரங்கா நகர் பேருந்து நிறுத்தத்தில் மதுபோதை யில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவெக திருப்பூர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அமீன், அவிநாசி நகர இளைஞரணி உறுப்பினர்களான பிரித்வி, யோகேஷ்வரன் ஆகிய 3 பேரும், ராஜ்குமாரை தாக்கியுள்ள னர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அவிநாசி நகரச் செயலா ளர் மோகன், ராஜ்குமாரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள் ளார். இதையடுத்து பெற்றோர், ராஜ்குமாரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தாய் ராதாமணி அளித்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார், அமீன், பிரித்வி, யோகேஷ்வரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓசூரில் விமான நிலையம்: ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை

கோவை, ஜூன் 28- ஓசூரில் விமான நிலையம் அமைக்க ஒன் றிய அரசு அனுமதி வழங்கவில்லை என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் ஞாயி றன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வருவாய்த்துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை. அந்த துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மந்தை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகை நிலங்களில் வசித்து வரும் மக்க ளுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இன்னும் 10 ஏக்கர் நிலம் தேவைப் படுகிறது. சேலம் விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு அனு மதி வழங்கவில்லை, என்றார்.

சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் உயிரிழப்பு

ஈரோடு, ஜூன் 28- ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில், வியாபாரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். ஈரோடு, வீரப்பன்சத்திரம், மல்லி நகரை சேர்ந்தவர் ரபீக்(38). கவரிங் மோதிர வியாபாரியான இவர், சந்தைகளில் மோதிர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர், நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளியன்று இரவு சென்று கொண்டிருந் தார். பெ.அக்ரஹாரம், காமராஜ் நகர் பகுதி அருகே சென்ற போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரபீக்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, ரபீக் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டு நரான ஈரோடு ஆர்.என்.புதூரை சேர்ந்த கோகுல் (27) என் பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.