எடப்பாடியில் தவாக வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு
8 Apr 2026, 5:30 am

எடப்பாடியில் தவாக வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் செவ்வாயன்று தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் காணாமல் போயுள்ளதாகக் கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் எடப்பாடி அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, வேட்பாளர் அருண்குமார் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ வெளியானது. அதில், "தன்னுடைய வேட்பு மனுவை திரும்பப் பெறும்படி அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும்" அவர் கூறியதாகத் தகவல் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.