தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவெக அமைச்சரவை விரிவாக்கம் : மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

21 May 2026, 9:10 pm
தவெக அமைச்சரவை விரிவாக்கம் : மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

தவெக அமைச்சரவை விரிவாக்கம் : மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

சென்னை, மே 21 - தமிழகத்தில் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர வை, வியாழக்கிழமை (மே 21) அன்று விரிவாக்கம் செய்யப்பட் டது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் 23 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை) நடைபெற்ற விழாவில் ஆளு நர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர் களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்ற அமைச்சர்கள் ஆளுநர் மற்றும் முதலமைச்ச ருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். கடந்த மே மாதம் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தனிப் பெரும்பா ன்மைக்குத் தேவையான எண்ணிக்கை கிடைக்காததால், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.

தவெக தலைவர் ச. ஜோசப் விஜய், மே 10 அன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற் றார். அவருடன் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன் பிரபு, கீர்த்த னா வெங்கட்ரமணன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற னர். மே 16 அன்று அவர்களுக் கான துறைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, வியாழக்கிழமையன்று மேலும் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களாக, ஸ்ரீநாத் (தூத்துக்குடி), கமலி (அவி நாசி), விஜயலட்சுமி (குமார பாளையம்), ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்ப கோணம்), ராஜீவ் (திருவாடா னை), ராஜ்குமார் (கடலூர்), காந்தி ராஜ் (அரக்கோணம்), மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர் — காங்கிரஸ்), விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), விஸ்வநாதன் (மேலூர்-காங்கிரஸ்), குமார் (வேளச்சேரி), தென்னரசு (ஸ்ரீபெ ரும்புதூர்), சம்பத் குமார் (கோவை வடக்கு), முஹமது ஃபர்வாஸ் (அறந்தாங்கி), சரத்குமார் (தாம்பரம்), மரிய வில்சன் (ஆர். கே. நகர்), விக்னேஷ் (கிணத்துக் கடவு) ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடும் அதிகாரப்பூ ர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது (விபரம் : பக்கம் 3).

துறைகள் மாற்றம்

கே.ஏ. செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை, புதிதாக பதவி யேற்றுக் கொண்ட என். மரிய வில்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர், நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்ச ராக பணியாற்றுவார். செங்கோட்டை யனுக்கு வருவாய், மாவட்ட வரு வாய் நிர்வாகம் மற்றும் சி.டி. நிர்மல் குமாரிடமிருந்த சட்டப் பேரவை விவகாரங்கள் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர். நிர்மல்குமாரிடம் மின்சாரம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச் சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு துறைகள் தொடர்கின்றன.

முதல்வர் விஜய்க்கு கூடுதல் பொறுப்புகள்

முதல்வர் சி. ஜோசப் விஜய், பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியத் துறை களைத் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.

59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ்

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. கிள்ளி யூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜேஷ் குமாரும், மதுரை மேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற பி. விஸ்வநாதனும் அமைச்சர் களாகப் பதவியேற்றனர். இதன்மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

விசிக - ஐயுஎம்எல்

தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் விடுதலைச் சிறுத்தை கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறவில்லை. எனினும், விரைவிலேயே விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

சி.வி. சண்முகம் தரப்பு இடம்பெறவில்லை

அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலு மணி தரப்பினருக்கு, அமைச்சர வையில் இடமளிக்கப்படும் என்று ஊடகங்களில் செய்தி கள் வெளியாகின. எனினும், வியாழனன்று நடைபெற்ற விழா வில் அதிமுக தரப்பு அமைச்ச ரவையில் இடம்பெறவில்லை.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

முன்னதாக விரிவாக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு விழா வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பி னர் பி. சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகரன், தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஆர். வேல்முருகன், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டி யன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் மாநிலத் தலை வர் கு. செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பட்டியல் வகுப்பினர் பெண்கள், இளைஞர்கள்

விஜய் தலைமையிலான விரி வாக்கப்பட்ட அமைச்சரவையில் ராஜ்மோகன், கமலி, லோகேஷ் தமிழ்ச்செல்வன், காந்தி ராஜ், மதன்ராஜ், தென்னரசு மற்றும் காங்கிரஸ் சார்பிலான விஸ்வ நாதன் ஆகிய 7 பேர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

மொத்த அமைச்சரவையில் எஸ். கீர்த்தனா (சிவகாசி), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), விஜயலட்சுமி (குமாரபாளையம்), கமலி (அவிநாசி) ஆகிய நான்கு பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

28 முதல் 39 வயதுக்குள் 13 இளம் அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் இடம் பெற்று ள்ளனர். அவர்களின் வயது விவரங்கள்: கமலி 28, கீர்த்தனா 29, ரமேஷ் மற்றும் முஹமது பர்வேஸ் 31, வினோத் 32,சரத்குமார் மற்றும் ராஜீவ் 34, தென்னரசு 36, விக்னேஷ் 38, ராஜ்மோகன் மற்றும் விஜய் பாலாஜி 39 வயது.

தலைநகர் சென்னைக்கு 7 அமைச்சர்கள்

சென்னையிலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் விஜய் உட்பட 7 பேர் சென்னை மாவட்டத்திலிருந்து அமைச்சர்களாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். திருச்செங்கோடு தொகுதி அருண்ராஜ் ஏற்கெனவே அமைச்சராக இருந்த நிலையில், இன்றைய விரிவாக்கத்தில் விஜயலட்சுமி (குமாரபாளையம்), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்) ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர். காஞ்சிபுரம், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 2 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மூன்றாவது இடத்திற்குப் போன தமிழ்த்தாய் வாழ்த்து

அமைச்சரவை விரிவாக்கப் பதவியேற்பு விழா துவங்குவதற்கு முன்பாக, பதவியேற்க வந்திருந்த அமைச்சர்கள் அனைவரையும் முதல்வர் விஜய் தனித்தனியாக ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். விழா தொடங்கியதும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதமும், கடைசியாக தமிழ்த்தாய்த் வாழ்த்தும் பாடப்பட்டன. விழா நிறைவிலும் இதே வரிசையில் பாடல்கள் ஒலித்தன.

பதவியேற்பு விழா நிறைவடைந்தவுடன் ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் புதிய அமைச்சர்கள் அனைவரும் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த மே 10 அன்றைய பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அன்றிரவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என உறுதியளித்திருந்தார். எனினும் மே 21 பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.