முந்தய பக்கம்

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

3 hours before
இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
<p>தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.</p><p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செப்.9-ஆம் தேதி முதல் செப்-16-ஆம் தேதி வரி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக நேற்று அரிவித்தது. திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.</p><p>இதை தொடர்ந்து இவ்விரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தவெக இன்று அறிவித்துள்ளது. தவெக சார்பில், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.</p><p>கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்கள் இருவரும், பின்னர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தற்போது, மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram