முந்தய பக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக, அதிமுக வெற்றி

6 May 2026, 1:43 am
செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக,  அதிமுக வெற்றி
<p><strong>செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக, அதிமுக வெற்றி</strong></p><p>செங்கல்பட்டு, மே 5- செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மூன்று முக்கியத் தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட தியாகராஜன் மிகப்பொன்னான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இவர் தனது எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 35,641 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி வாகை சூடினார். தியாகராஜன் (தவெக): 1,37,136 வாக்குகள்., இரண்டாம் இடம் - கார்த்திக் தண்டபாணி (திமுக): 1,01,495 வாக்குகள், மூன்றாம் இடம் - கஜேந்திரன் (அதிமுக): 69,763 வாக்குகள் பெற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram