முந்தய பக்கம்

தென் மண்டல கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!

11 Aug 2026, 10:13 pm
தென் மண்டல கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!

தென் மண்டல கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!

தூத்துக்குடி, ஆக.11 -தேனியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி சாம்பியன் பட்டத்தைவென்றது.

தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் தென் மண்டல சீனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தன.

இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 90 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், தேனி மாவட்ட அணியும் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும் மோதின.இந்தப் போட்டியில் 93-47 என்ற புள்ளிக் கணக்கில் வஉசி துறைமுக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைவென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தேனி எல்.எஸ் மில் அதிபர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றஅணிக்கு கோப்பையை வழங்கினார்.

சாம்பியன் பட்டம் வென்ற அணி வீரர்கள், பயிற்சியாளரும் துறைமுக சபை உறுப்பினருமான சத்யாஆகியோருக்கு வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர்பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram